வாகனங்களில் பழைய டயர்களை பயன்படுத்தினால் 500 திர்ஹம் அபராதம்.

வாகனங்களில் பழைய டயர்களை பயன்படுத்தினால் 500 திர்ஹம் அபராதம்.ஐக்கிய அரபு அமீரகத்தில் வாகனங்களில் பழைய டயர்களை உபயோகித்தால் 4 புள்ளிகளுடன் 500 திர்ஹம் அபராதமும் ஒரு வாரத்திற்கு வாகனத்தையும் காவலில் வைக்கப்படும் என்று அபுதாபி காவல் துறை அறிவித்துள்ளது.

வாகனங்களை அசுத்தமாக வைத்திருந்தால் 500 திர்ஹம் அபராதம்.
குவைத்தில் ஓட்டுநர் உரிமம் இல்லாத வாகன ஓட்டிகள் நாடுகடத்தப்படுவார்கள்.

இந்த வருட ஆரம்பம் மாதமான ஜனவரி முதல் கடந்த ஜூன் மாதம் வரையில் வாகனங்களின் டயர் வெடித்து விபத்துகள் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்துகளில் 2 பேர் பலியாகியுள்ளனர், 8 பேருக்கு மிதமான காயங்கள் உண்டாகியுள்ளது, 4 பேருக்குச் சாதாரண காயங்கள் ஏற்பட்டுள்ளதை  மேற்கோள் காட்டி இந்த அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆறு மாதங்களில் மட்டும் பழைய டயர்கள், சேதமடைந்த டயர்கள் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் மீது அபராதம் மற்றும் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 5376 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கோடைக் காலங்களில் உங்கள் வாகனங்களை அடிக்கடி சோதித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து விபத்துகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள அபுதாபி காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

வளைகுடா தமிழன்

GN190711
Leave a Reply

%d bloggers like this: