பள்ளிகளுக்கு ஜூன் மாதம் 10-ம் தேதி வரை விடுமுறை

பள்ளிகளுக்கு ஜூன் மாதம் 10-ம் தேதி வரை விடுமுறை

தமிழகத்தில் வெயில் வாட்டி வரும் நிலையில் அனைத்து பள்ளிகளும் வருகிற ஜூன் மாதம் 10-ம் தேதி வரை விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பெரும்பாலான நகரங்களில் 108 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் மேல் வெப்பம் தாண்டியுள்ளது. பகல் நேரங்களில் வெப்பமும், இரவு நேரங்களில் அனல் காற்றும் வீசி வரும் இச்சூழ்நிலையில் சிறு குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் மாதம் 3 ஆம் தேதி திறக்கப்படும் என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால் வெயிலின் கொடுமை காரணமாக விடுமுறை நாட்களின் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.


அதன்படி, ஜூன் 3-ஆம் தேதிக்கு பதிலாக ஜூன் 10 ஆம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்படும் என்று புதிதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
Leave a Reply

%d bloggers like this: