குன்னம் அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் விவசாயி பலி
குன்னம் அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் விவசாயி பரிதாபமாக இறந்தார். 2 பேர் படுகாயமடைந்தனர்.
கார் கவிழ்ந்தது
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கல்லம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் நல்லமுத்து(வயது 65). விவசாயி. இவரும், அதே கிராமத்தை சேர்ந்த மணிவேலும்(44) குளிர்சாதன பெட்டி வாங்குவதற்காக ஒரு காரில் பெரம்பலூருக்கு வந்து கொண்டிருந்தனர். அந்த காரை ராமதாஸ்(40) ஓட்டினார்.
பரவாய் கிராமத்தில் இருந்து பெரம்பலூர் நோக்கி ஒதியம் புதிய பிரிவு பாதை அருகே கார் வந்தபோது முன்னால் ஒரு லாரி சென்றது. அந்த லாரியை முந்த முயன்றபோது எதிரே வாகனம் வந்ததால், நிலை தடுமாறிய கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்தது.
சாவு
இதில் காரில் பயணம் செய்த நல்லமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த ராமதாஸ், மணிவேல் ஆகியோர் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து த கவல் அறிந்த குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் அங்கு சென்று, நல்லமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினத்தந்தி
You must log in to post a comment.