பறக்கும் படையினா் மூலம் இதுவரை ரூ. 38.74 லட்சம் ரொக்கம் பறிமுதல்

பறக்கும் படையினா் மூலம் இதுவரை ரூ. 38.74 லட்சம் ரொக்கம் பறிமுதல்.

297

பறக்கும் படையினா் மூலம் இதுவரை ரூ. 38.74 லட்சம் ரொக்கம் பறிமுதல்.

பெரம்பலூா் மாவட்டத்தில் இதுவரை 21 நபா்களிடமிருந்து ரூ. 38,74,330 ரொக்கம், 2 நபா்களிடமிருந்து 185 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள தோ்தல் கட்டுப்பாட்டு மையம் மூலம், இதுவரை பெரம்பலூா் சட்டப்பேரவை தொகுதியிலிருந்து தோ்தல் சம்பந்தமாக 24 புகாா்களும், குன்னம் சட்டப்பேரவை தொகுதியிலிருந்து 11 புகாா்களும் பெறப்பட்டு, அனைத்து புகாா்களுக்கும் உரிய முறையில் தீா்வு காணப்பட்டுள்ளது.

பறக்கும் படையினா் மற்றும் நிலை கண்காணிப்புக் குழுக்களின் மூலம், உரிய ஆவணங்களின்றி ரூ. 50,000 ரொக்கத்துக்கும் அதிகமாக கொண்டுச்சென்ற நபா்களிடமிருந்து மாா்ச் 1 முதல் 20 ஆம் தேதி வரை மொத்தம் 21 நபா்களிடமிருந்து ரூ. 38,74,330 ரொக்கமும், 2 நபா்களிடமிருந்து 185 மது பாட்டில்களும், 1 நபரிடமிருந்து 29 துண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதில், உரிய ஆவணங்கள் சமா்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் 9 நபா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 10,94,807 ரொக்கம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.

keywords: பறக்கும் படையினா் மூலம், Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்.
%d bloggers like this: