V.Kalathur Lake

பருவமழையும் பற்றாக்குறையும் பெரம்பலூர் மாவட்டம் ஒரு பார்வை

Kallaru TV

பருவமழையும் பற்றாக்குறையும் பெரம்பலூர் மாவட்டம் ஒரு பார்வை


பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் கட்டுப்பாட்டில் மொத்தம் 73 ஏரிகளும், 300க்கும் மேற்பட்ட குளங்களும் உள்ளன. மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 861மி.மீ. ஆக இருக்க வேண்டிய பட்சத்தில், 2019-ஜனவரி முதல் செப்டம்பர் வரை 409.27மி.மீ அளவு மட்டுமே மழை பெய்துள்ளது.

மாவட்டத்தின் ஓராண்டிற்கான மழையளவு (861மி.மீ) எட்டுவதற்கு, இனி வரும் அக்டோபர்-நவம்பர்-டிசம்பர் மாதங்களில் 466மி.மீ. அளவு மழை பெய்யவேண்டும்.

கடந்த வாரங்களில் பெய்த தென்மேற்கு பருவமழையளவும் போதுமானதாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

காரணம், மாவட்டத்திலுள்ள மொத்தம் 73 ஏரிகளில் கீழப்பெரம்பலூர் மற்றும் வடக்கலூர் ஆகிய 2 ஊர் ஏரிகள் மட்டுமே 100%நிறைந்துள்ளது. குரும்பலூர், ஆய்குடி, நெற்குணம் ஆகிய 3 ஊர்களின் ஏரிகள் 70% நிறைந்துள்ளது.

Kallaru TV

மேலும் வி.களத்தூர், லாடபுரம், எழுமூர், கை.களத்தூர் மற்றும் கீரனூர் ஆகிய 5 ஊர்களில் உள்ள ஏரிகள் 25% முதல் 50% வரை நிறைந்துள்ளது.

மீதமுள்ள ஏரிகளில் நீர்மட்ட அளவு போதுமானதாக இல்லை. அதே போல, விரைவில் சுற்றுலா தலமாக ஆக இருக்கும் மாவட்டத்தின் முக்கியப் பகுதியான விசுவக்குடி டேமிலும் நீர் இன்னும் நிரம்பவில்லை.

இந்த ஆண்டு கோடையில் கடும் வறட்சியின் காரணமாக குடிநீருக்கே அல்லாடிய பெரம்பலூர் மாவட்ட மக்களுக்கு, தற்போது பெய்துள்ள தென்மேற்கு பருவமழை 90% குடிநீர் பற்றாக்குறையைத்தான் போக்கியுள்ளதே தவிர, விவசாயத்திற்குப் போதுமானதாக இல்லை.

ஆனாலும் இதுவரை பெய்துள்ள பருவமழையினை நம்பி, மாவட்டம் முழுக்க விவசாயிகள் சோளம், பருத்தி போன்ற புன்செய் பயிர்களை அதிக அளவில் பயிரிட்டுள்ளனர். போதிய மழையின்மை காரணமாக, நெல் சாகுபடி குறைவாகத்தான் உள்ளது.

இனி மீதமுள்ள மூன்று மாதங்களில், மாவட்டத்தின் சராசரி மழையளவை எட்டும் அளவிற்கு மழை பொழிந்தால்தான் விவசாயிகளின் வாழ்வாதாரம் ஓரளவிற்கேனும் சீராகும்.

மேலும், மாவட்டத்திலுள்ள குளம், கண்மாய் போன்ற நீர்நிலைகளை தூர்வாராததும், விற்பனை குடிநீருக்காக அதிக அளவில் போர் போடப்பட்டதும் நிலத்தடி நீர்மட்ட உயர்வை கேள்விக்குறியாக்கிவிட்டது. இந்த நிலையில், இனிவரும் மாதங்களில் வர இருக்கும் மழை வந்தால்தான் வசந்தம்.

தவிர, மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து மக்களிடையே நீர் மேலாண்மை மற்றும் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வை இன்னும் தீவிரமாக செயல்படுத்தவேண்டும்.

“நீரின்றி அமையாது உலகு” என்று நம் முன்னோர்கள் சும்மாவா சொல்லிவிட்டுப் போனார்கள்?

-ச.மோகன்-

கருத்தினை பகிர்ந்துகொள்ள:
70948 56420




Leave a Reply

%d bloggers like this: