Perambalur Bio Metric

பெரம்பலூர் மாவட்டத்தில் 65 அரசு பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகை பதிவேடு நடைமுறை

பெரம்பலூர் மாவட்டத்தில் 65 அரசு பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகை பதிவேடு நடைமுறை


பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் முதன் முறையாக மாவட்டம் முழுமை க்கும் மின்ஆளுமைத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனையொட்டி தமிழ கத்தில் முன்னோடியாக பெரம்பலூர் மாவட்டத்தில் பரீட்சார்த்தமாக பள்ளி ஆசிரியர்களுக்கான பயோமெட்ரிக் எனப்படும் தொடுஉணர் வருகைப்பதி வேடு முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இது ஆன்லைன் குளறுபடி, பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்குக்கூட கையா ளத் தெரியாததுபோன்ற காரணங்க ளால் முழுமையாக வெற்றிபெறாமல் இருந்தபோதும், மாவட்டஅளவில் 50 பள்ளிகளில் பரிச்சார்த்தமாக நடை முறைப்படுத்தப்பட்டது. இதனையடுத்து ஆஃப்லைன் மூலம் பள்ளி மாணவர்களு க்கான பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையும் பரீட்சார்த்தமாக நடைமுறை படுத்தப்பட்டது. இதற்காக பள்ளிக்கல்வித் துறை சார்பா க வழங்கப்பட்ட சாப்ட்வேர் டிவைஸ் மூலம் பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு முறை குறிப்பிட்ட சிலபள்ளிகளில் மட்டும் நடைமுறையில் இருந்துவந்தது.

இந்நிலையில் பெரம்பலூர்மாவட்டத்தில் பரீட்சார்த்தமாக பள்ளி ஆசிரியர்களுக்கு தொடங்கப்பட்ட பயோமெட்ரிக் வருகை ப்பதிவு முறை தற்போது தமிழகஅளவில் நடப்பு கல்வியாண்டில் ஜூன் 3ம்தேதி முதல் நடைமுறைப்படுத்த தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. இதன்படி ஆன்லைன்மூலம் ஆசிரியரின் வருகைப்பதிவை ஆதார்எண்கள் உதவி யுடன் பதிவுசெய்யும்முறை நடைமுறை க்கு வந்துள்ளது.

அதாவது ஆதார் எனேபில்டு பயோமெ ட்ரிக் அட்டெண்டென்ஸ் சிஸ்டம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு நேற்று முதல் தமிழக அளவில் நடைமுறைக்கு வந்துள்ளது. இதில் ஆசிரியர்களுக்கான பயோ மெட்ரிக் வருகைப்பதிவேடு முறைக்கு ஆசிரியர்களின் ஆதார்எண்கள் கட்டா யம் தேவையாகும்.

ஆதார்எண்களை சரியாக பதிவுசெய்யாவிட்டால் ஆசிரிய ர்கள் தங்களது வருகையைப் பதிவுசெய்ய முடியாது. இதனையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 96 அரசுப் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, ஆதிதிராவிடர் நலப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச்சேர்ந்த தலைமைஆசிரியர்கள், கணினி ஆசிரி யர்கள் உள்ளிட்டோருக்கு 2கட்டங்களாக சிறப்புப் பயிற்சிவகுப்புகள் பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி, புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக ளில் நடத்தப்பட்டுள்ளது. இருந்தும் நேற்று பெரம்பலூர் மாவட்ட த்திலுள்ள 85 அரசு உயர்நிலை மேல்நி லைப் பள்ளிகளில் 65 அரசுப்பள்ளிக ளில் மட்டுமே பயோமெட்ரிக் வருகைப் பதிவேடுமுறை நடைமுறைப் படுத்தப் பட்டது.

20 பள்ளிகளில் பாஸ்வேர்டுகளை டிவைஸ் ஏற்காததால் ஏமாற்றமடைத்த பள்ளித் தலைமை ஆசிரியர் வழக்கம் போல் நோட்டிலுள்ள வருகைப் பதிவே ட்டில் கையெழுத்துக்களை போடச்சொ ல்லி ஆசிரியர்களை வகுப்புக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் திட்டமிட்டபடி அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இன்னமும் பயோமெட்ரிக் டிவைஸ்களே அரசால் அனுப்பப் படாததால் அங்கு பயோ மெட்ரிக் வருகைப் பதிவேடு நடை முறைப்படுத்தப் படாமலேயே உள்ளது.

மேலும் தொடங்கப் பட்டுள்ள 65பள்ளிக ளிலும் 2முறை செயல்விளக்கப் பயிற்சி கள் அளித்தும் ஆன்லைன் கோளாறுக ளால் பல பள்ளிகளில் தடங்கல்கள் ஏற்பட்டதாலும் அதனை வெளியே காட்டி க்கொள்ளாமல் மூடி மறைத்துவிட்டதால் 60சதவீதப் பள்ளிகளில்மட்டுமே பயோ மெட்ரிக் நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிகிறது. 10, 12ம் வகுப்பு வேலைவாய்ப்பு பதிவை 17ம் தேதி வரை பள்ளிகளில் பதியலாம்.

தினகரன்




Leave a Reply

%d bloggers like this: