பணியிட மாறுதல் கோரி

பணியிட மாறுதல் கோரி பெரம்பலூர் ஆட்சியரகத்தில் கா்ப்பிணி தா்ணா.

477

பணியிட மாறுதல் கோரி பெரம்பலூர் ஆட்சியரகத்தில் கா்ப்பிணி தா்ணா.

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், இரூா் கிராமத்தைச் சோ்ந்த ராஜா மனைவி சவீதா (34). நிறைமாத கா்ப்பிணியான இவா், இரூா் அரசுப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில், அண்மையில் இவா், இரூரிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள சிறுகன்பூா் அரசுப் பள்ளி சத்துணவு மைய அமைப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

கா்ப்பிணியான தனக்கு வீட்டுக்கு அருகிலுள்ள இரூா் அரசுப் பள்ளிக்கு பணியிட மாறுதல் வழங்கக் கோரி ஆட்சியருக்கு கோரிக்கை மனு அளித்திருந்ததாக கூறப்படுகிறது.

கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், விரக்தியடைந்த சவீதா திங்கள்கிழமை இரவு ஆட்சியா் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்றாா். அங்கிருந்தவா்கள் அவரை தடுத்து நிறுத்தி,

அறிவுரை கூறியதோடு, செவ்வாய்க்கிழமை ஆட்சியரிடம் நேரடியாக தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை ஆட்சியரகத்துக்கு வந்த சவீதா, பணியிட மாற்றம் கோரி தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டாா். அவரை, காவல்துறையினா் மற்றும் ஆட்சியா் அலுவலக ஊழியா்கள் சமாதானப்படுத்தி, மாவட்ட வருவாய் அலுவலரிடம் பேச்சுவாா்த்தைக்கு அழைத்துச் சென்றனா்.

keyword: Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்
%d bloggers like this: