பட்டதாரி இளைஞர்களுக்கு தமிழக அரசு வேலை
[the_ad id=”7250″]
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 500 பணியிடங்களை நேரடி நியமனத்தின் மூலம் நிரப்பிட அறிவிக்கப்பட்டுள்ளது. வணிகவியல் துறையில் பி.காம் படித்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தமிழ்நாடு மின்சார வாரியம்
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடம் : 500
பணி : இளநிலை உதவியாளர் (கணக்கு)
கல்வித் தகுதி : வணிகவியல் துறையில் பி.காம் முடித்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : TANGEDCO Recruitment 2020 பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 01.07.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில் தேர்வு முறை : கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வுக் கட்டணம் : பி.சி., எம்.பி.சி., பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ.1,000 கட்டணமாகச் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.500 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tangedco.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 09.03.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.tangedco.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினைக் காணவும்.
[the_ad id=”7252″]
You must log in to post a comment.