அமீரகத்தில் ஈதுல் அதுஹா என்னும் பக்ரீத் பெருநாள் விடுமுறை அறிவிப்பு!

அமீரகத்தில் ஈதுல் அதுஹா என்னும் பக்ரீத் பெருநாள் விடுமுறை அறிவிப்பு!


ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஆண்டிற்கான ஈதுல் அதுஹா என்னும் பக்ரீத் பெருநாளுக்கான விடுமுறையை நாட்களை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை அமீரக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தமது அதிகாரப் பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

துல் ஹஜ் மாதத்தின் பிறை 9-க்கு அரபா தினமாகவும், பிறை 10 பக்ரீத் பெருநாளாகவும் அதைத்தொடர்ந்த இரண்டு நாட்கள் சேர்த்து 4 நாட்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் வரும் ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி (சனிக்கிழமை) முதல் 13-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை விடுமுறை தினங்களாகும். 9-ம் தேதி வெள்ளிக்கிழமையாக இருப்பதால் தொடர்ந்து ஐந்துநாட்கள் விடுமுறை தினங்களாக இருக்கிறது.

மற்ற வளைகுடா நாடுகளிலும் பக்ரீத் பெருநாளுக்கான விடுமுறை தினங்களை விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வளைகுடா தமிழன்Leave a Reply

%d bloggers like this: