பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று இரவு பலத்த மழை

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று இரவு பலத்த மழை


பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பலத்தக் காற்றுடன் பரவலாக மழை பெய்தது. மழையைத் தொடர்ந்து வீசிய சூறாவளிக்காற்றில் ஏராளமான சேதங்கள் ஏற்பட்டன.

கடந்த 3 மாதத்திற்கு மேல் வெயிலின் தாக்கமும் எதிர்பார்த்ததை விட கடுமையாகவே காணப்பட்டது. கோடை மழையும் பெய்யாமல், பெரம்பலூர் மக்களை ஏமாற்றியது. கோடை வெயிலின் தாக்கத்தால் நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு காணப்படுகிறது. மேலும் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து பெரம்பலூர் மாவட்டத்தில் கடும் குடிநீர் பஞ்சம் தலை விரித்தாடிகிறது.

இந்த ஆண்டு அக்னி நட்சத்திரத்தின் போது, வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்திருந்தது. கடந்த 4-ந்தேதி அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் தொடங்கியது. தொடக்கமே அதிக வெப்பத்துடன் ஆரம்பித்த கத்திரி வெயில் நேற்று முன்தினம் முடிவடைந்தது. பெரம்பலூரில் கத்திரி வெயில் தொடங்கியதில் இருந்து முடியும் வரை 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் கொளுத்தியது.

இந்நிலையில் நேற்று இரவு காற்றுடன் கூடிய மழை பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்தது. அக்னி வெயிலின் கடுமையான தாக்கத்தை அனுபவித்து வந்த பெரம்பலூர் மாவட்ட மக்களுக்கு நேற்று பெய்த மழை பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply

%d bloggers like this: