நேரு ஒரு பெண் பித்தர்: பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு.

நேரு ஒரு பெண் பித்தர்: பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு.


“முன்னாள் பிரதமர் நேரு ஒரு பெண் பித்தர்” என உ.பி.,யை சேர்ந்த பாஜக எம்எல்ஏ.,வான விக்ரம் சைனி பேசி உள்ளது, புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு விக்ரம் சைனி, பேஸ்புக்கில் விக்ரம் ராஷ்டிரவாடி என்ற பெயரில், உலக நாடுகளின் தலைவர்களுடன் மோடி எடுத்துக் கொண்ட போட்டோ ஒன்றை பதிவிட்டிருந்தார். நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க், பிரதமர் மோடியை பார்ப்பது போன்ற அந்த போட்டோவுடன், ” மோடி பாரத மாதாவை தான் பார்ப்பார். அவர் நேரு அல்ல; மோடி” என பதிவிட்டிருந்தார்.

இது தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பிய போது தன்னை நியாயப்படுத்தி பேசிய அவர், நேரு ஒரு பெண் பித்தர். அவர் பிரிட்டிஷாருடன் இணைந்து நாட்டை துண்டாக்கியவர். அவரது குடும்பமே இச்சையை விரும்பக் கூடியது. அதனால் தான் ராஜிவ், இத்தாலியை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டார் என்றார்.

விக்ரம் சைனியின் இந்த பேச்சு தேசிய அரசியலில் புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.
Leave a Reply

%d bloggers like this: