பெரியார் முழக்கம் எனும் நூல் வெளியீட்டு விழா.

பெரியார் முழக்கம் எனும் நூல் நூல் வெளியீட்டு விழா.

பெரம்பலூரில், பெரியார் முழக்கம் எனும் நூல் வெளியீட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, ஓவியர் கி. முகுந்தன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பெரியாரியல் அறிஞர் வே. ஆணைமுத்து, பெரம்பலூர் மாவட்டத்தில் பெரியார் முழக்கம் எனும் நூலை வெளியிட, அதை பெற்றுக்கொண்டார் தந்தை ரோவர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கி. வரதராஜன்.

மதிமுக அமைப்புச் செயலர் ஆ. வந்தியத்தேவன், திமுக கொள்கை பரப்பு துணைச் செயலர் ச.அ. பெருநற்கிள்ளி, அக்ரி ஆறுமுகம், கவிஞர் அகவி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.  தொடர்ந்து, நூலாசிரியர் கு. வரதராசன் ஏற்புரை வழங்கினார். விழாவில், கவிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணிLeave a Reply

%d bloggers like this: