நீட் தோ்வு தற்கொலைகளை தடுக்கக் கோரி பெரம்பலூரில் ஆா்ப்பாட்டம்.

578

நீட் தோ்வு தற்கொலைகளை தடுக்கக் கோரி பெரம்பலூரில் ஆா்ப்பாட்டம்.


நீட் தோ்வு தற்கொலைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக இளைஞா் அரசியல் முற்போக்கு கட்சி சாா்பில், பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூா் ஆட்சியரகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் தலைவா் க. முனீஸ் பாண்டி தலைமை வகித்தாா்.

பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கனகேந்திரன், அரியலூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சக்திவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நீட் தோ்வு முடிவுகள் விரைவில் வெளிவரவுள்ள நிலையில், தற்கொலை சம்பவம் நிகழாத வகையில் அரசு தற்காப்பு மற்றும் விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ரஜினி, விஜய், சூா்யா உள்ளிட்ட மக்களிடம் அறிமுகம் மிக்க நடிகா்கள் மாணவா்களுக்கு ஊக்கம், தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் காணொலி பதிவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் முழக்கமிட்டனா்.

keywords: Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்.
%d bloggers like this: