நியூசிலாந்து பள்ளிவாசலில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் நீதிமன்றத்தில் ஆஜர்.

நியூசிலாந்து பள்ளிவாசலில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் நீதிமன்றத்தில் ஆஜர்.

ஆஸ்திரேலியா குடிமகனான பிரெண்டன் டாரன்ட், கிறிஸ்ட்சர்ச் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது, ஏப்.5ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் வரை சிறை வைக்க உத்தரவிட்டனர்.

நீயூசிலாந்தின் இருவேறு மசூதிகளில் நேற்று துப்பாக்கி ஏந்திய நபர் நடத்திய தாக்குதலில் 49 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரெண்டன் டாரன்ட் என்னும் 28 வயதான ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒருவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஆஸ்திரேலியா குடிமகனான பிரெண்டன் டாரன்ட், கிறிஸ்ட்சர்ச் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரப்படுத்தப்பட்டார். அப்போது, ஏப்.5ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் வரை அவரை சிறை வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கைவிலங்கு போடப்பட்ட நிலையில், வெள்ள நிற சிறைச்சாலை உடையணிந்து ஆஜர்படுத்தப்பட்ட அவர், எதுவும் பேசவில்லை. நீதிமன்ற விசாரணையின் போது, அவரை ஊடகவியலாளர்கள் புகைப்படம் எடுத்தனர், அப்போது அவர்களை ஏளனாக பார்த்துள்ளார் அவர்.

இந்த வழக்கில் பிரெண்டன் டாரண்ட் ஜாமீன் எதுவும் கோரவில்லை. மேலும், அவர் அடுத்தக்கட்ட விசாரணைக்கு தயாராக உள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

நியூசிலாந்தில் நடந்த இந்த துப்பாக்கி சூட்டில் சுமார் 41 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். இதேபோல் இங்கிருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள லின்வுட் ஆவ் மசூதிக்குள்ளும் புகுந்த மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் கூறுகையில், இந்த நாள் நியூசிலாந்து வரலாற்றில் மிகவும் மோசமான நாளாகும். இது தீவிரவாத தாக்குதல் என தெளிவாக தெரிகிறது. இது நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதல். இந்த தாக்குதல் சம்பவத்தில் எத்தனை பேர் ஈடுபட்டனர் என்பது தெரியவில்லை. ஆனால் 3 பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

மேலும், இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பிரதமர் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். தீவிர வாதம் எந்த வகையில் வந்தாலும் அதை ஒருங்கிணைந்து எதிர்ப்போம் என்றும், தீவிர வாதத்துக்கு ஆதரவாக நிற்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

நியூசிலாந்து இனவெறி தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த 9 பேர் காணாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என நியூசிலாந்துக்கான இந்திய தூதர் சஞ்சீவ் கோலி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

83total visits,2visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: