புதிய செய்தி :

தண்ணீர் நின்னுகிட்டா குடிக்கிறீங்க?

நீரை குடிக்காமல் எந்தவொரு மனிதனாலும் உயிர் வாழ முடியாது. ஒரு மனிதன் சராசரியாக ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் அளவு தண்ணீர் அருந்த வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

தண்ணீரை நின்று கொண்டு குடிக்க கூடாது, அப்படி தொடர்ச்சியாக குடித்தால் உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுமாம். தண்ணீரை நின்று கொண்டு குடித்தால் அது வயிற்று உட்பகுதிக்குள் சென்று தெளித்து சிதறுகிறது. இதனால், நம் வயிறும், இரைப்பையும் கடுமையாக பாதிக்கும்.

நரம்பு பிரச்னை, வயிறு செரிமான பிரச்சனை போன்றவைகளும் தண்ணீரை நின்று கொண்டு குடித்தால் வர அதிக வாய்ப்பிருக்கிறது. நின்று கொண்டு தண்ணீர் அருந்தினால், உடல் திரவங்கள் பாதிக்கப்பட்டு நமது கால் மூட்டு பகுதியை பாதித்து வலியை ஏற்படுத்தும். மேலும், நெஞ்செரிச்சல், அல்சர் போன்ற நோய்களுக்கும் இது வழிவகுக்குமாம்.

அதேபோல் தண்ணீரை, நாம் உட்கார்ந்து பொறுமையாக கொஞ்சம் கொஞ்சமாக குடித்தால் உடலில் உள்ள ஆசிடிட்டி அளவு நீர்த்து போகும் மற்றும் உடலுக்குள் சரியான கலவையில் நீரானது சென்று உடலை புத்துணர்ச்சியோடு வைக்கும்.
Leave a Reply