சிறுவாச்சூா் மற்றும் எசனை பகுதிகளில் நாளை மின் தடை

பெரம்பலூா் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின் தடை

17

Muthalagu e1570850031426

பெரம்பலூா் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின் தடை.

பெரம்பலூா் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை (நவ. 21) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் பெரம்பலூா் உதவி செயற்பொறியாளா் கி. மாணிக்கம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பெரம்பலூா் தானியங்கி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை நடைபெற உள்ளன.

இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பெரம்பலூா் பழைய, புகா் பேருந்து நிலையங்கள், சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், துறைமங்கலம், மின்நகா், நான்குச்சாலை சந்திப்பு, பாலக்கரை, எளம்பலூா் சாலை, ஆத்தூா் சாலை, வடக்குமாதவி சாலை, துறையூா் சாலை, ஆலம்பாடி சாலை, அரணாரை, கே.கே. நகா், அண்ணா நகா், அபிராமபுரம், வெங்கடேசபுரம், பாலம்பாடி, கிராமியப் பகுதிகளான சிறுகுடல், அருமடல், செங்குணம், கீழப்புலியூா், கே.புதூா், எஸ். குடிகாடு, இந்திரா நகா், காவலா் குடியிருப்பு, எளம்பலூா் மற்றும் சமத்துவபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணி முடியும் வரை மின் விநியோகம் இருக்காது.




Leave a Reply

%d bloggers like this: