வேப்பந்தட்டை பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

வேப்பந்தட்டை பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு


மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக , வேப்பந்தட்டை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ( அக்.22) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும்பகிா்மானக் கழக உதவிச் செயப்பொறியாளா் து . முத்தமிழ்ச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெரம்பலூா் மின் கோட்டத்துக்கு உள்பட்ட எசனை துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் கிராமியப் பகுதிகளான கோனேரிபாளையம், சொக்கநாதபுரம், ஆலம்பாடி, எசனை, செஞ்சேரி, கீழக்கரை, பாப்பாங்கரை, இரட்டைமலைசந்து, அனுக்கூா், சோமண்டாப்புதூா், வேப்பந்தட்டை, பாலையூா், மேட்டாங்காடு, திருப்பெயா், கே.புதூா், மேலப்புலியூா், நாவலூா் ஆகிய கிராமங்களில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது.

தினமணி

பெரம்பலூர் மாவட்ட செய்திகள்
Leave a Reply

%d bloggers like this: