மின்சாரம் தடை

பாடாலூர் பகுதியில் நாளை (ஆக. 13) மின்சாரம் இருக்காது.

பாடாலூர் பகுதியில் நாளை (ஆக. 13) மின்சாரம் இருக்காது.

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஆக. 13) மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளார் சிறுவாச்சூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ரா. அசோக்குமார்.

புதுக்குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூர், கொளக்காநத்தம், பாடாலூர், சாத்தனூர், சா.குடிகாடு, அயினாபுரம், அணைப்பாடி, இரூர், தெற்கு மாதவி, ஆலத்தூர் கேட், தெரணி, தெரணிபாளையம், திருவிளக்குறிச்சி, அ. குடிகாடு, நல்லூர் ஆகிய கிராமங்களில் செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணி முடியும் வரை மின்சாரம் இருக்காது எனத் தெரிவித்துள்ளார்.








Leave a Reply

%d bloggers like this: