நல்ல ஊதியத்தில் எஸ்பிஐ வங்கியில் வேலை வாய்ப்பு!

நல்ல ஊதியத்தில் எஸ்பிஐ வங்கியில் வேலை வாய்ப்பு!

1203

நல்ல ஊதியத்தில் எஸ்பிஐ வங்கியில் வேலை வாய்ப்பு!

நல்ல ஊதியத்தில் எஸ்பிஐ (SBI) வங்கியில் வேலை வாய்ப்பு. தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு.

SBI SO 2020, job vacancies

மத்திய அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான State Bank of India எனப்படும் பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நல்ல ஊதியத்தில், மொத்தம் 64 பணியிடங்களை நிரப்பிடுவதற்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்குத் தேவையான கல்வித் தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விபரங்களை இங்கே காணலாம் வாங்க.

எஸ்பிஐ சிறப்பு அதிகாரி:

எஸ்பிஐ வங்கியின் சார்பில் தற்போது சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. https://www.sbi.co.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலிப்பணியிட விபரங்கள்:

SBI SO Recruitment வெளியிட்டுள்ள சிறப்பு அதிகாரி பதவிக்கு மொத்தம் 64 காலிப் பணியிடங்கள் உள்ளன. வங்கி பணிக்காகக் காத்திருப்போர், வங்கி தேர்விற்கு முயற்சி செய்து கொண்டிருப்போர் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி:-

மேற்கண்ட SBI SO பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஏதேனும் ஓர் துறையில் இளங்கலைப் பட்டம் அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருந்தால் போதுமானது. குறிப்பாக, அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலை, கல்வி நிறுவனத்தில் பட்டப் படிப்பு மேற்கொண்டிருக்க வேண்டும்.

வயது வரம்பு:-

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கு 25 முதல் 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பில் முழு விபரத்தினைக் காணலாம்.

எஸ்பிஐ வங்கியின் தற்போது வெளியிடப்பட்டுள்ள சிறப்பு அதிகாரி பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.sbi.co.in/web/careers என்னும் இணையதளம் மூலம் ஆன்லைன் வழியாக 13.07.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

SBI SO Recruitment முக்கிய நாட்கள்:

SBI SO விண்ணப்பப்பதிவு தொடங்கிய நாள் : 26 ஜூன் 2020

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 13.07.2020

விண்ணப்பத்தில் பிழை திருத்துவதற்கான கடைசி நாள் : 13.07.2020

விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்வதற்கான கடைசி நாள் : 31.07.2020

ஆன்லைன் வழியில் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டிய நாள் : 23.06.2020 முதல் 13.07.2020 வரையில்.

SBI SO Recruitment மேலும் விபரங்கள்:

SBI SO பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய https://tamil.careerindia.com/jobs/sbi-so-recruitment-2020-sbi-so-notification-out-direct-link-to-apply-here/articlecontent-pf5859-006146.html என்னும் லிங்க்கையும், விண்ணப்பப் படிவத்தினைப் பெற https://recruitment.bank.sbi/crpd-sco-wealth-2020-21-03/apply என்னும் லிங்க்கையும் கிளிக் செய்யவும்.

tag: job vacancies, SBI SO 2020
%d bloggers like this: