புதிய செய்தி :

நம்ம புகைப்படங்கள் வெளியாக இதுகூட ஒரு காரணம்னு தெரியுமா?

இந்தியாவில் இப்போது பல மில்லியன் மக்கள் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களை பயன்படுத்துகின்றனர், மேலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட்போனில் இணையத்தை அதிக நேரம் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது வரும் புதிய தொழில்நுட்பங்களில் அதிகமான நன்மைகள் உள்ளன, அதேசமயம் பல்வேறு தீமைகளும் ஏற்படுகின்றன .

இந்தியாவில் உள்ள பல மில்லியன் மக்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் தான் அதின உபயோகம் செய்கின்றனர், மேலும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் போது கவனமாக பயன்படுத்த வேண்டும். குறிப்பாக இணையத்தில் வரும் விளம்பரங்களில் பல்வேறு தீமைகள் ஏற்படுகின்றன.

இ-மெயில்:

உதரணமாக உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள இ-மெயில் ஐடி, பாஸ்வர்ட் மற்றவர்களுக்கு தெரிந்தால் உங்களுடைய ஸ்மார்ட்போனை மற்றவர்கள் எளிமையாக இயக்க முடியும். மேலும் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள இ-மெயில் ஐடி, பாஸ்வர்ட் போன்றவற்றை பயன்படுத்தி போட்டோ, வீடியோ, அதன்பின்பு ஸ்மார்ட்போனில் உள்ள கேமராவைக் கூட எளிமையாக மற்றவர்கள் இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

லாக் செய்ய முடியும்:

மேலும் பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் உங்கள் அனுமதி இல்லமால் ஸ்மார்ட்போனில் உள்ள அனைத்து தகவல்களையும், மற்றும் தரவுகளையும் உடனே அழிக்க முடியும், பின்பு எளிமையாக உங்கள் ஸ்மார்ட்போனை லாக் செய்ய முடியும், பின்னர் நீங்கள் இருக்கும் இடத்தைக் கூட கண்டுபிடிக்க முடியும்.

அப்ளிக்கேஷன்:

பொதுவாக ஸ்மார்ட்போனில் தேவையற்ற அப்ளிக்கேஷன் பயன்படுத்தவே கூடாது, மேலும் கூகுள் பிளே ஸ்டோரில் நம்பகத்தன்மையுள்ள அப்ளிக்கேஷன்களை மட்டும் பயன்படுத்துவது மிகவும் நல்லது.

விளம்பரங்கள்:

குறிப்பாக இப்போது நாம் அனைவரும் வாட்ஸ்ஆப் அதிகம் பயன்படுத்துகின்றோம், அவ்வாறு பயன்படுத்தும் போது இந்த செய்தியை (message) 10 நண்பர்களுக்கு பகிரவும், மேலும் குறிப்பிட்ட லிங்க்-ஐ 10 நண்பர்களுக்கு பகிரவும் போன்ற விளம்பரங்கள் வரும், அவற்றை அனுமதிக்கவே கூடாது.

லிங்க்:

ரூ.40,000 மதிப்புள்ள ஸ்மார்ட்போனை வெறும் 5000ரூபாய்க்கு வாங்க இந்த லிங்க்-ஐ 10 நண்பர்களுக்கு share-செய்யவும், போன்ற விளம்பரங்கள் கண்டிப்பாக ஸ்மார்ட்போனில் உள்ள சில அப்ளிக்கேஷன் மூலம் வரும், அவ்வாறு வந்தால் அவற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது.

ஐபி முகவரி:

மேலும் ஸ்மார்ட்போனில் தேவையில்லாமல் வரும் இந்த விளம்பரங்களை நீங்கள் கிளிக் செய்து உங்களுடைய இ-மெயில் ஐடி, பாஸ்வர்ட், மேலும் உங்களுடைய விவரங்களை கொடுக்கும் போது உங்கள் ஸ்மார்ட்போனை மிக எளிமையாக மற்றவர்கள் இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக உங்களின் ஐபி முகவரி வரை மற்றவர்கள் தெரிந்துகொள்ள முடியும், இதுபோன்ற தேவையில்லாத லிங்க்-ஐ கிளிக் செய்வதன் மூலம்.

source: tamil.gizbotLeave a Reply