வி.களத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு

வி.களத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு

313

வி.களத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வி.களத்தூர் மேட்டுச்சேரியை சேர்ந்த அருள் மனைவி பானுமதி (வயது 24). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டி விட்டு இனாம்அகரம் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டிற்குள் பீரோ திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து பீரோவில் பார்த்தபோது அதற்குள் வைக்கப்பட்டிருந்த ஒரு பவுன் நகை மற்றும் ரூ.4 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

இது குறித்து வி.களத்தூர் போலீசில் பானுமதி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

தினத்தந்தி

Our Facebook Page
%d bloggers like this: