ஜெயங்கொண்டம் அருகே வீட்டு பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

ஜெயங்கொண்டம் அருகே வீட்டு பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை


ஜெயங்கொண்டம் அருகே வீட்டு பூட்டை உடைத்து 9 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஆண்டிமடம் அடுத்த பெரியகருக்கை கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செல்வராணி கடந்த 23ம் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள உறவினர் வீட்டு நிச்சயதார்த்த விழாவுக்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில் ராஜேந்திரன் வீட்டின் கதவு திறந்து கிடந்ததை பார்த்து ஆண்டிமடம் காவல் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது வீட்டின் உள்ளே இருந்த இரும்பு பீரோ திறந்து கிடந்தது. உடனடியாக போலீசார், சென்னையில் உள்ள செல்வராணிக்கு தகவல் தெரிவித்தனர்.

மேலும் மோப்பநாய் வரவழைக்கபட்டது. வீட்டிலிருந்து சிறிது தூரம் ஓடி மோப்பநாய் நின்றது.இதையடுத்து சென்னையில் இருந்து வந்த செல்வராணி பார்த்ததும் பீரோவில் வைத்திருந்த 9 பவுன் நகைகள், வெள்ளி கொலுசு, ரூ.42 ஆயிரம் ரொக்கத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதேபோல் அருகில் இருந்த மற்ற 2 வீடுகளிலும் மர்மநபர்கள் திருட முயற்சித்துள்ளனர். அங்கு ஏதும் இல்லாததால் தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து ஆண்டிமடம் காவல் நிலையத்தில் செல்வராணி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

தினகரன்

அரியலூர் மாவட்ட செய்திகள்
Leave a Reply

%d bloggers like this: