பெரம்பலூர் அருகே வீடு புகுந்து நகை திருடிய தம்பதி கைது

பெரம்பலூர் அருகே வீடு புகுந்து நகை திருடிய தம்பதி கைது.


பெரம்பலூர் அருகே வீடு புகுந்து நகையை திருடிச் சென்ற கணவன், மனைவியை பெரம்பலூர் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

குரும்பலூர் கடைவீதிப் பகுதியில் வசிப்பவர் சுப்ரமணியன் மனைவி கவிதா (35). இவர், வியாழக்கிழமை மாலை வீட்டைப் பூட்டி, அதன் சாவியை அருகே வைத்து விட்டு கோயிலுக்குச் சென்றிருந்தாராம். பின்னர், வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு அதிலிருந்த 15 பவுன் நகை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், பெரம்பலூர் மாவட்டம், லப்பைக்குடிகாடு ஜமாலியா நகரைச் சேர்ந்த ஹாலிக் பாட்ஷா (54), அவரது மனைவி சம்சாத் (28) ஆகியோர் நகை திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்த போலீஸார், பெரம்பலூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமணி
Leave a Reply

%d bloggers like this: