சர்வதேச போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு தகவல் – பிசிசிஐ மறுப்பு

சர்வதேச போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு தகவல் – பிசிசிஐ மறுப்பு


இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் தோனி இன்று ஓய்வு அறிவிப்பை வெளியிடப் போகிறார் என கிளம்பிய வதந்தியால் அவரது ரசிகர்கள் பரபரப்பில் இருக்கிறார்கள். குறிப்பாக இரவு ஏழு மணிக்கு தோனி பத்திரிக்கையாளர் சந்திப்பில் தன் ஓய்வை அறிவிப்பார் என்ற தகவல் வேகமாக பரவி வந்தது. இதனால் சமூக வலைதளம் முழுவதும் தோனி ரசிகர்களின் உணர்ச்சிக் கொந்தளிப்பில் உள்ளன.

இந்நிலையில் சர்வதேச போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெறவுள்ளதாக வெளியான தகவலுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் ஓய்வு குறித்து தோனி பிசிசிஐ-யிடம் எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

%d bloggers like this: