சமீபத்திய பதிவுகள்
Search

தோனியின் ‘முடிவெடுக்கும் திறனும்’, ‘கிரிக்கெட் மூளை’யும் இந்திய அணியின் பலம்: யுவராஜ் சிங்.

தோனியின் ‘முடிவெடுக்கும் திறனும்’, ‘கிரிக்கெட் மூளை’யும் இந்திய அணியின் பலம்: யுவராஜ் சிங்.

இந்திய விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் தோனி ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் தொடரில் ஹாட்ரிக் அரைசதம் அடித்து அசத்தினார். அந்தத் தொடரின் ஆட்ட தொடர்நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தோனி குறித்து இந்திய வீரர் யுவராஜ் சிங் தனது கருத்தை ஆஸ்திரேலிய தொடருக்கு பின்னால் தெரிவித்துள்ளார். அதில் “2019 உலகக் கோப்பையில் தோனியின் ‘முடிவெடுக்கும் திறனும்’, ‘கிரிக்கெட் மூளை’யும் இந்திய அணியின் பலமாக அமையும்” என்றார்.

ஆஸ்திரேலிய தொடருக்கு முன்னால் தோனியின் பேட்டிங் குறித்து சில விமர்சனங்கள் எழுந்தன. 2018ல் 20 ஒருநாள் போட்டிகளில் 275 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார் என்பதே அதற்கு காரணமாக கூறப்பட்டது. 2019ல் இந்த நிலையை தோனி தனது பேட்டிங் மூலம் பதிலளித்துள்ளார்.

தோனியின் இந்த சிறப்பான பேட்டிங்கை இந்திய கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரும் புகழ்ந்துள்ளனர்.

இதே விஷயத்தை யுவராஜும் வலியுறுத்தி உள்ளார். “தோனி இந்தியாவின் கிரிக்கெட் மூளை. அவர் கீப்பராக இருப்பதால் ஆட்டத்தை கணிக்கும் சிறந்த இடத்தில் இருக்கிறார். அதனை கடந்த சில ஆண்டுகளாக இதனை சிறப்பாக செய்கிறார் தோனி. அவர் ஒரு சிறந்த கேப்டன். அவர் அறிவுரை கோலிக்கு கைகொடுக்கும்” என்றார் யுவராஜ்.

மேலும் “அவரது முடிவெடுக்கும் திறன் வியக்க வைக்கிறது. ஆஸ்திரேலிய தொடரில் அவரது பேட்டிங் மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

ஆனால் தோனி எந்த இடத்தில் ஆட வேண்டும் என்று மட்டும் முடிவெடுக்கப்படவேண்டும் என்றார். இதை தோனியே முடிவு செய்ய வேண்டும் என்றார்.

2019 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒப்பந்தமாகியுள்ள யுவராஜ். மிடில் ஆர்டரில் பங்களிப்பை அளிக்க முடியும் என்றார்.

தினசரி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக யுவராஜ் கூறியுள்ளார்.
Leave a Reply

%d bloggers like this: