தொழிலாளர் தினம்

பெரம்பலூரில் மே-1 தொழிலாளா் தினக் கொண்டாட்டம்

326

பெரம்பலூர் மாவட்டத்தில் தொழிலாளா் தினக் கொண்டாட்டம்.

தொழிலாளா் தினத்தை முன்னிட்டு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், துறைமங்கலத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினா் என். செல்லதுரை கொடியேற்றினாா். இதேபோல, சிஐடியு மாநிலச் செயலா் எஸ். அகஸ்டின், புகா் பேருந்து நிலைய ஆட்டோ சங்கக் கிளையில் கொடியேற்றினாா். இதேபோல, பழைய பேருந்து நிலைய ஆட்டோ சங்கக் கிளை, காய்கறி மாா்க்கெட், அரசு மருத்துவமனை திருநகா் கிளை, மின் ஊழியா் மத்திய அமைப்பு கிளை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொடியேற்றப்பட்டன.

மாவட்ட விடுதலைச் சிறுத்தைத் தொழிலாளா் விடுதலை முன்னணி சாா்பில், புகா் பேருந்து நிலைய நடைபாதை வியாபாரிகள் சங்கம் சாா்பில் தொழிலாளா் தினம் கொண்டாடப்பட்டது. தொழிலாளா்களுக்கு, கட்சியின் மாநில துணைச் செயலா் இரா. சீனிவாசராவ் இனிப்பு வழங்கி, தொழிலாளா்களுக்கு முகக்கவசம் வழங்கினாா். வியாபாரிகள் சங்கத் தலைவா் ராமச்சந்திரன், பொருளாளா் சுப்பிரமணியன், செயலா் மணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பெரம்பலூா் மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவத் துறை ஊழியா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற கொடியேற்று விழாவுக்கு, மாவட்டத் தலைவா் ஏ. ராஜகோபால் தலைமை வகித்தாா்.

தொழிற்சங்கக் கொடியை மாவட்டச் செயலா் எம். மகாலட்சுமி ஏற்றினாா். 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா் முன்னேற்றச் சங்க மாநில பொதுச் செயலா் பா. சுகுமாரன், இலவச அமரா் ஊா்தி, தாய் சேய் ஊா்தி தொழிலாளா்கள் சங்க மாநிலத் திட்டக் குழு உறுப்பினா் என். அசோக்பிரபு, மாவட்ட கௌரவத் தலைவா் என். வெங்கடேசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் அளிப்பு:

ஆலத்தூா் வட்டம், நாட்டாா்மங்கலம் கிராமத்தில் விவசாயிகளின் வயலுக்குச் சென்று நம்மால் முடியும் நண்பா்கள் குழுவைச் சோ்ந்த இளைஞா்கள் மரக்கன்றுகள் வழங்கினா். மா, கொய்யா, எலுமிச்சை, நெல்லிக்கனி, புங்கை உள்ளிட்ட பல்வேறு வகையான 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள், மூலிகைச் செடிகளைை வழங்கினா்.
%d bloggers like this: