பெரம்பலூரில் பெண்களுக்கான இலவச தையல் கலை பயிற்சி பெற அழைப்பு

பெரம்பலூரில் பெண்களுக்கான இலவச தையல் கலை பயிற்சி பெற அழைப்பு


பெரம்பலூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் தையல் கலை மற்றும் மகம் வேலைப்பாடு பயிற்சி வகுப்புகள் மே 13 ஆம் தேதி முதல் இலவசமாக அளிக்கப்படுகிறது. பயிற்சி பெற 18 முதல் 45 வயதுக்குக் குறைவாக, எழுதப் படிக்கத் தெரிந்தவராக, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக, சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருக்க வேண்டும்.  தொடர்ந்து 30 நாள்கள் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியானது காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

பயிற்சியின்போது, காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படுவதோடு, பயிற்சி முடிந்தவுடன் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். மே 9 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறுபவர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு 04328 277896 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மையத்தின் இயக்குநர் ஜே. அகல்யா தெரிவித்துள்ளார்.

தினமணி

288total visits,2visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: