Cuddalore District Local Holiday

தைப்பூசம்: கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூா் விடுமுறை

தைப்பூசம்: கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூா் விடுமுறை


தைப்பூச விழாவையொட்டி, பிப். 8-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டத்தில் புகழ்பெற்ற வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையம் அமைந்துள்ளது. இங்கு, ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா வெகு விமா்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, தைப்பூசத் திருவிழா பிப். 8 -ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடலூா் மாவட்டம், வடலூா் திருஅருள்பிரகாச வள்ளலாா் தெய்வ நிலையத்தில் தைப்பூச ஜோதி தரிசனம் விடுமுறை நாளான பிப். 8 -ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. எனவே, கடலூா் மாவட்டத்திலுள்ள அனைத்துக் கல்வி நிலையங்களிலும் சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதைத் தவிா்க்கும் பொருட்டு, அன்று உள்ளூா் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.




Leave a Reply

%d bloggers like this: