தேவையின்றி வாகனங்களில்

தேவையின்றி வாகனங்களில் சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

475

தேவையின்றி வாகனங்களில் சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

குன்னம் பகுதியில் தேவையின்றி வாகனங்களில் சுற்றித்திரிபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுற்றித்திரியும் வாலிபர்கள்

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அரசு அனுமதித்தபடி குன்னம் பகுதியில் உள்ள வியாபாரிகள் விதிமுறைகளை கடைபிடித்து 10 மணிக்கு கடைகளை மூடி விடுகின்றனர். அவ்வாறு மூடப்படாத கடைகளை போலீசார் எச்சரித்து கடைகளை மூடி விடுகின்றனர். சில இடங்களில் பின்பக்கம் திறந்து வியாபாரம் செய்யும் கடைகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் குன்னம், வேப்பூர், புதுவேட்டக்குடி, மேலமாத்தூர், பெரிய வெண்மணி உள்ளிட்ட அனைத்து கிராமப்புற பகுதிகளில் வியாபார நேரமான காலை 6 மணி முதல் 10 மணி வரையில் கடைகளில் பொருட்கள் வாங்க வரும் நபர்களில் பாதி பேர் முக கவசம் அணிந்தும், மீதி பேர் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் உள்ளனர். இதேபோல் 10 மணிக்கு மேல் கடைகள் அடைக்கப்பட்டாலும் வாலிபர்கள் தங்களது மோட்டார் சைக்கிளில் தேவையின்றி ஊர் சுற்றி வருகின்றனர். கடைகள் மூடப்பட்டு இருந்தாலும் எதை வாங்க எங்கு செல்கின்றனர் என்பது தெரியவில்லை.

பரிசோதனை செய்ய வேண்டும்

அரசின் நோய்தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத்தால் குன்னம் பகுதியில் உள்ள கிராமங்களில் 2 அல்லது 3 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய்த்தாக்கத்தின் உச்சமாக காரைபாடி கிராமத்தில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர். வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் மூலம் சளி, காய்ச்சல், இருமல் இருந்தால் உடனடியாக ஊராட்சி சுகாதார மையத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து சிகிச்சை பெற வேண்டும் என்றும், சுயமாக சிகிச்சை மேற்கொள்ளக்கூடாது என்றும் அது ஆபத்தில் முடியும் என்றும் தண்டோரா மூலம் தெரிவித்துள்ளனர்.

சிலர் சட்டவிரோதமாக விற்பனை செய்யும் மது பாட்டில்களை வாங்கிக்கொண்டு குழுவாக சேர்ந்து மறைவான இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மது அருந்தி வருகின்றனர். இதுவும் கொரோனா தொற்றுக்கு வழி வகுக்க கூடிய செயலாக உள்ளது. குன்னம் பகுதியில் தேவையின்றி மோட்டார் சைக்கிள்களில் சுற்றுபவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும், கடந்த சில நாட்களுக்கு முன்பு குன்னம், ஆலத்தூர் தாலுகாவை சேர்ந்த சிலர் சென்னை சென்று வந்தனர். அதில் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சென்னை சென்று திரும்பியவர்கள் தாங்களாகவே முன்வந்து பரிசோதனை செய்து தங்களையும், தங்கள் குடும்பத்தையும் பாதுகாத்து கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினத்தந்தி

Our Facebook Page
%d bloggers like this: