தேர்தல் பறக்கும் படையினரின் சோதனையை கலெக்டர் விஜயலட்சுமி ஆய்வு.

தேர்தல் பறக்கும் படையினரின் சோதனையை கலெக்டர் விஜயலட்சுமி ஆய்வு.


தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை செய்யும் பணியினை அரியலூர் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியுமான விஜயலட்சுமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, சிதம்பரம் (தனி) தொகுதிக்குட்பட்ட அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய வாகனங்களில் பணம் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்டறிய பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அரியலூர் மாவட்டம் திருமானூர் ஊராட்சி ஒன்றியம், சாத்தமங்கலம் கிராமத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை செய்யும் பணியினை அரியலூர் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியுமான விஜயலட்சுமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த தினசரி நாளிதழ்கள், உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் அச்சக உரிமையாளர்களுடன் நாடாளுமன்ற தேர்தலில் பிரசாரம் செய்வது தொடர்பாக அரசியல் கட்சிகளின் விளம்பரம் வெளியிடுதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிதாபானு, செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஜெயஅருள்பதி, கோட்டாட்சியர்கள் சத்தியநாராயணன் (அரியலூர்), ஜோதி (உடையார்பாளையம்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினத்தந்திLeave a Reply