துபாயில் தேமுதிக சார்பாக இப்தார் நிகழ்ச்சி.

Hits: 0

துபாயில் தேமுதிக சார்பாக இப்தார் நிகழ்ச்சி.

தேமுதிக நிறுவனத்தலைவரின் கேப்டன் ஆணைக்கினங்க துபாயில் 10 ஆம் ஆண்டு மதநல்லிணக்க இப்தார் நடத்தப்பட்டது.

அமீரக பிரிவு செயலாளார் மதுரை S. காரல்மார்க்ஸ்  தலைமையில் இந்த இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியானது துபாயில் உள்ள ஸ்பின்சர் (SPINZER)நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.  அவைத்தலைவர் கமால் KVL, பொருளாளர் சதீஷ்
துணைச் செயலாளர்கள் மாரிமுத்து, அம்ஜத்அலி, சகிலன், நெல்லை தவசிமுருகன் ஆகியோரது முன்னிலையில் நடைபெற்றது.

மதநல்லிணக்கம் வாயந்த இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அமீரக இமான் சங்க பொதுச்செயலாளர் திரு.முகமது யாசின், துபாய் அல்பா குரூப் டைரக்டர் நாகூர் காஜா, அமீரக காயிதேமில்லத் பேரவை பொதுச்செயலாளர் ஹமிதூர் ரஹ்மான், மதிமுகவின் அமீரக செயலாளர் திரு.பாலா, விடுதலைசிறுத்தைகள் அமீரக செயலாளர் திரு.முத்தமிழன், பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகி திரு.செல்வராஜ், அமமுக அமீரக பொறுப்பாளர் திரு.நஜிம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

கேப்டன் அவர்கள்பூரண நலம் பெற்று மீண்டும் அரசியல் பயணம் தொடர சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

இவ்விழாவில் அமீரகத்தில் உள்ள இஸ்லாமிய சகோதரர்களும், நண்பர்கள் மற்றும் ஏராளமான தேமுதிக அமீரக பிரிவு கழக தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
Leave a Reply