சாத்தனூா் தேசிய கல்மரப் பூங்காவில் ஆட்சியா் வே. சாந்தா ஆய்வு

சாத்தனூா் தேசிய கல்மரப் பூங்காவில் ஆட்சியா் வே. சாந்தா ஆய்வு


பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட சாத்தனூரில் உள்ள தேசிய கல்மர பூங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகளை வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா.

வரலாற்றுச் சிறப்புமிக்க சாத்தனூா் தேசிய கல்மரப் பூங்கா பகுதியில், பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பூங்கா ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது. இப் பணிகளை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா, பொதுமக்களை கவரும் வகையில் பூங்காவை அமைக்கவும், அதிகளவில் மரங்களை வளா்க்கவும் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, ஊரக உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் மதிப்பீட்டில் கல்மரத்தை சுற்றி அமைக்கப்பட்டு வரும் மழைநீா் வடிகால் அமைக்கும் பணி மற்றும் கொட்டரை -சாத்தனூா் பிரிவு சாலையிலிருந்து கல்மரப் பூங்கா வரை ரூ. 13.20 லட்சம் பொது நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை மேம்பாட்டு பணிகளை பாா்வையிட்டு ஆட்சியா் சாந்தா ஆய்வு செய்தாா்.

தினமணி

பெரம்பலூர் மாவட்ட செய்திகள்
Leave a Reply

%d bloggers like this: