Perambalur vilamuthur

விளாமுத்தூர் சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீர்

2

விளாமுத்தூர் சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீர்


பெரம்பலூர் அருகே உள்ள நொச்சியம் ஊராட்சிக்கு உட்பட்டது விளாமுத்தூர் கிராமம். இந்த கிராமத்தில் இருந்து திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் இணைப்பு சாலை 500 மீட்டர் நீளத்திற்கு உள்ளது. கடந்த சில தினங்களாக கொட்டி தீர்த்த கன மழையால், ஏற்கனவே தார் சாலை இருந்ததற்கான அடையாளமே இல்லாதபடி இந்த சாலை தற்போது கழிவு நீர் குட்டை போல் காட்சியளிக்கிறது.

தேசிய நெடுஞ்சாலை வழியாக வாகனங்களில் வருவோர் இந்த இணைப்பு சாலையை பயன்படுத்தி, நொச்சியம், புதுநடுவலூர், அரனாரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லக்கூடிய வசதி உள்ளது. சமீபத்தில் பெய்த மழையால் தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற ஊராட்சி நிர்வாகமோ, ஒன்றிய நிர்வாகமோ, முன் வரவில்லை.

இதனால் குட்டைபோல் காட்சியளிக்கும் இந்த சாலையில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து எழுந்து செல்லும் அவல நிலையில் உள்ளது. ஆகையால் சம்பந்தபட்ட சாலையை விரைந்து சீரமைத்து தர வேண்டும் என விளாமுத்தூர் கிராம மக்கள் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள கிராம மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்ட செய்திகள்




Leave a Reply

%d bloggers like this: