தெலுங்கானா மக்கள்தான் என் குழந்தைகள்: விஜயசாந்தி

Hits: 0

தெலுங்கானா மக்கள்தான் என் குழந்தைகள். அதனால்தான் நான் குழந்தைகளை பெற்றுக் கொள்ளவில்லை என்று பிரபல நடிகை விஜயசாந்தி அதிரடியாக பேசியுள்ளார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் பிரபல நடிகை விஜயசாந்தி. இவருக்கு தமிழிலும், தெலுங்கிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நேரடியாக அதிக தமிழ் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கில் இவர் நடித்த படங்கள் டப் செய்யப்பட்டு தமிழில் வெளியாகின. அந்த படங்கள் அனைத்துமே ஹிட் ஆகியுள்ளன. அரசியலில் ஈடுபட்ட பின்னர் இவர் சினிமாவில் நடிப்பதை சிறிது சிறிதாக நிறுத்திக் கொண்டார்.

காங்கிரஸ் கட்சிக்காக தற்போது பிரச்சாரக் கூட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். அண்மையில் தெலுங்கானாவில் உள்ள ஒரு அரசியல் மேடையில் பேசும்போது, ‘‘தெலுங்கானா மக்கள் தான் என் குழந்தைகள்; அவர்களுக்குப் பணி செய்யவே நான் குழந்தைகள் பெற்றுக் கொள்ளவில்லை’’ என்றார்.
Leave a Reply