தூங்காதே தம்பி தூங்காதே, தூங்காதே தம்பி தூங்காதே, நீயும் சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
1958-ம் ஆண்டு நாடோடி மன்னன் படத்திற்காக பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களால் எழுதப்பட்ட தத்துவ பாடல் இது. எக்காலத்திற்கும் பொருத்தமான இந்த பாடல் வரிகள் கேட்கும் போதே நம்மை தூக்கத்தில் இருந்து தட்டி எழுப்பும். motivation story
இந்த பாடலுக்கு என்ன சம்பந்தம்னு நீங்க நினைக்கிறது புரிகின்றது. சரி நேரடியா விசயத்திற்கு வருவோம். அனேகருடைய வாழ்வில் தூக்கம் பெரும் இடைஞ்சலா இருக்கிறது. அது அதிகமான தூக்கத்தினாலோ, குறைந்த தூக்கத்தினாலோ, நேரம் கெட்டு நேரம் தூங்குவதினாலோ இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இப்படிபட்ட தூக்கத்தினால் மனதும், உடலும் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்திக்கின்றது என்பதை மருத்துவர்கள் சொல்லி தெரிந்துக் கொள்ளவேண்டிய அவசியமில்லை. இரண்டு நாட்கள் தூங்காமல் இருந்தால் என்ன நடக்கும் என்பது நம் வாழ்வில் நாமே கண்டிருப்போம். அதே போல நீண்ட நேரம் தூங்கினாலும் நேரம் விட்டு நேரம் தூங்கினாலும் உடல் அலுப்பும், சோம்பலுமாக நம்மை கஷ்டப்படுத்திவிடும்.
என்னதான் சொல்ல வறீங்க என்று நீங்க கேட்பது என் காதில் விழுகிறது. இது தூக்கத்தினால் உண்டாகும் பிரச்சனை என்ன என்பதற்கான பதிவு அல்ல. வெற்றியை நோக்கியும் லட்சியத்தை நோக்கியும் முன்னேர துடிக்கும் நேரத்தில் உறங்கியே காலத்தை கழிக்க வேண்டாம் என்பதை எடுத்துச் சொல்லவே இந்த பதிவு. motivation story in tamil
சோம்பேறி தனம்
தூங்குவதற்கு முன் எடுக்கப்பட்ட பல முடிவுகள் தூங்கி எழுந்தவுடன் மாறிவிடுகிறது. ஆம் சோம்பேறி தனம், தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பிறகு செய்வோம், நாளை செய்வோம், நேரம் கடந்துவிட்டது இப்படியாக பல காரணங்களை சொல்ல வைத்துவிடுகிறது. அதோடு மட்டுமல்ல பலருக்கு பொருளாதார இழப்புகளையும் ஏற்படுத்திவிடுகிறது.
Perambalur News :
- பெரம்பலூா் மாவட்ட விவசாயிகள் விதைச்சான்று பெற விண்ணப்பிக்கலாம்.
- பெரம்பலூா் அருகே மா்மமான முறையில் திருநங்கை உயிரிழப்பு.
- கொரோனா தொற்றால் பெரம்பலூா் மாவட்டத்தில் மேலும் இருவா் பலி.
அப்போ தூங்கவே வேண்டாம் என்கிறீர்களா? என்றால் இல்லை, நன்றாக தூங்குங்கள் நேரத்திற்கு படுத்து நேரத்திற்கு எழும் பழக்கத்தை உண்டாக்கி கொள்ளுங்கள். அது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
4முதல் 5 மணி நேரம்
நான் உங்களுக்கு ஒரு சின்ன ஐடியா சொல்லட்டுமா? அதிகாலையில் எழும் பழக்கத்தை ஏற்படுத்துங்களேன். அப்படி எழுந்துவிட்டால் 4முதல் 5 மணி நேரம் இலவசமாக கிடைத்த மாதிரி இருக்கும். அந்த நேரத்தை நமது ஆரோக்கியத்திற்கும், ஆன்மீகத்திற்கும் பயன் படுத்தலாம். மீதி நேரத்தை நம்ம குடும்பத்திற்கு உதவி செய்து அவர்களிடம் ஒரு சபாஷ் வாங்களாமே.
சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும். உடல் ஆரோக்கியமாக இருந்தால் தானே நன்றாக உழைப்பதற்கு உடல் ஒத்துழைக்கும். நம்மோட ஆரோக்கியத்திற்காக நடக்கலாம், ஓடலாம், சின்னதா உடற்பயிற்சி செய்யலாம். தூங்கிகொண்டே இருப்பதன் மூலம் இதுக்கான நேரம் நமக்கு கிடைக்காது. அதே போல ஆன்மீகத்திற்கும் நேரம் ஒதுக்கி நமது மனதை ஒருநிலை படுத்தவும், உள்ளத்தை சுத்தமாக வைப்பதற்கும் பிரார்த்தனைகள் செய்யலாம். இதனால் நமது மனது நல்ல பிரஸ்ஸாக இருப்பதற்கு உதவியாக இருக்கும். success motivation story
அப்புறம் சின்ன சின்னதா வீட்டு வேலை இதனால நமக்கும் நமது குடும்பத்திற்கான ஒரு நல்ல இணைப்பை பெறலாம். எப்போதும் வேலை, வேலை விட்டு வந்தால் தூக்கம் பிறகு வேலை என்று இருக்கும் வாழ்க்கை முறையில் இது கொஞ்சமல்ல நிறைய மாற்றத்தை உண்டாக்கும். இதனால் நாம் நினைக்கும் லட்சியத்தை அடைய எளிமையாக இருக்கும். நாமும் நமது வாழ்வில் வெற்றி பெறலாம். உங்களுக்கு தெரியுமா வாழ்வில் வெற்றி பெற்ற மனிதர்களில் பலரும் தமது அதிகாலை தூக்கத்தை தியாகம் செய்தவர்கள்தான்.
நேரத்தில் படுத்து நேரத்தில் எழுந்து வெற்றிக்கனிகளை பறிக்க தயாராவோம்.