துபாய் - ஷார்ஜா இடையே இனி டிராபிக் பிரச்சனை இருக்காது.

துபாய் – ஷார்ஜா இடையே இனி டிராபிக் பிரச்சனை இருக்காது.

284

துபாய் – ஷார்ஜா இடையே இனி டிராபிக் பிரச்சனை இருக்காது.


Gulf News: There will be no more traffic problems between Dubai and Sharjah.

துபாயில் மிர்திஃப் சிட்டி சென்டருக்கு அருகிலுள்ள அல் ரெபாத் மற்றும் ஷேக் முகமது பின் சயீத் சாலைகள் சந்திக்கும் இடத்தில் விரிவுபடுத்தப்பட்ட சாலைகள் மற்றும் பாலங்கள், நாளைமுதல் திறக்கப்பட உள்ளதாக துபாய் சாலை மற்றும் போக்குவரத்து துறையான  RTA அறிவித்துள்ளது.

அல் ரெபாத் மற்றும் திரிபோலி சாலைகளில் ஒரு லேன் சேர்க்கப்பட்டு இப்பகுதியில் தற்போதுள்ள பாலங்கள் அகலப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் துபாய் மற்றும் ஷார்ஜா இடையேயான போக்குவரத்துகளில் அதிகமான டிராபிக் இல்லாமல் எளிதாகவும் பாதுகாப்பாகவும் செல்ல வசதியாக இருக்கும் என்று RTA தெரிவித்துள்ளது.

ஷேக் சயீத் பின் ஹம்தான் அல் நஹ்யான் சாலையுடன் இணைக்கும் ஃப்ளைஓவர், எமிரேட்ஸ் சாலை மற்றும் நவுக்சோத் தெருவிற்கான பாலங்கள், மற்றும் அல்ஜீரியா செயின்ட் சந்திப்பில் ஒரு சுரங்கப்பாதை உட்பட திரிபோலி தெருவில் உள்ள அனைத்து சந்திப்புகளையும் RTA ஏற்கனவே மேம்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

gulf news, GCC Tamil news, GCC News
%d bloggers like this: