துபாயில்  வி.களத்தூர் சங்கமம் நிகழ்ச்சி

துபாயில்  வி.களத்தூர் சங்கமம் நிகழ்ச்சி

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் மக்கள் சந்தித்துக்கொண்ட ’வி.களத்தூர் சங்கமம்” என்ற நிகழ்ச்சி 29-03-2019 வெள்ளிக்கிழமை துபாய் முஸ்ரிப் பூங்காவில் காலை மணிமுதல் மாலை 6.30 மணிவரை நடைபெற்றது.

1970 ஆம் அண்டு முதலே வி.களத்தூர் கிராமத்திலிருந்து பொருளாதார முன்னேற்றத்திற்காக துபாயை நோக்கி பயணம் செய்தனர். அதன்பிறகு ஒருவர் மற்றொருவருக்கு உதவும்பொருட்டுதங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களையும் அமீரகம் வரவழைத்தனர். குடும்ப பொருளாதாரம் மேன்மை பெற்றது. இன்று ”குடும்பத்திற்கு ஒருவர்” என்ற நிலையில் துபாயில் வசித்து வருகின்றனர்.

துபாய்அபுதாபிசார்ஜாஉம்முல் குவைன்ராசல்கைமாபுஜைரா மற்றும் அஜ்மான் ஆகிய அமீரகத்தின் பல மாநிலங்களில் வசித்து வருகின்றனர். பல மாநிலங்களிலும் பல இடங்களில் பணியில் இருக்கும் இவர்கள் அடிக்கடி சந்தித்துக்கொள்ள இயலுவதில்லை.

ஒன்றுகூடி சந்திக்க முடிவெடுத்து 2011 ஆம் ஆண்டு வி.களத்தூர் சங்கமம்”  என்ற பெயரில் ஒன்று கூடல் நிகழ்ச்சியை துவக்கினார்கள். இந்த நிகழ்ச்சி 2011, 2012 க்கு பிறகு 2015 மற்றும் 2016 ஆண்டுகளிலும் நடத்தப்பட்டது. இரண்டு வருடங்களுக்கு பிறகு இந்த வருடம் (2019) “வி.களத்தூர் சங்கமம்” என்ற ஒன்று கூடல் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அனைத்து பகுதிகளிலுள்ள வி.களத்தூர் மக்கள் கலந்துக் கொண்டனர். நீண்ட நாட்கள்மாதங்கள்வருடங்களுக்கு பிறகு உறவினர்கள்நண்பர்களை சந்தித்த மகிழ்ச்சியில் ஒருவொருக்கொருவர் கண்டும் பேசியும் மகிழ்ந்தனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை உற்சாகப் படுத்தும் விதமாக விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. ஸ்பூன் பால் ரன்னிங்பந்துதைத்தல்கலர் கப் அடுக்குதல்இசைப்பந்து போட்டிஉரிஅடித்தல்  ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது. இது போல பெண்களுக்கான விளையாட்டு போட்டியும் நடத்தப்பட்டது.  வந்திருந்தவர்கள் வயது வித்தியாசமில்லாமல் விளையாட்டு போட்டிகளில் ஆர்வமாக கலந்துக் கொண்டனர்.

வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகையான ஜும்ஆ தொழுகைக்கு பிறகு, வந்திருந்த அனைவருக்கும் மதிய உணவு பரிமாறப்பட்டது.

நிகழ்ச்சியின் இறுதியாக நிகழ்ச்சியில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு  பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்காக இரண்டு வாரத்திற்கு முன்னதாகராசல்கைமாவில் வாலிபால் போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மூன்று அணிகளுக்கு சங்கமம் நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்பட்டன. 

பரிசு பெற்ற அணிகள்

முதல் பரிசு  – தாருஸ்ஸலாம் அணி

இரண்டாம் பரிசு – ராசல்கைமா ஏ அணி

மூன்றாம் பரிசு – ராசல்கைமா பி அணி

வாலிபால் போட்டி விபரங்களை நமது இணையதளத்தில் ஏற்கனவே பதிவிட்டிருந்தோம். அதை பார்க்க வி.களத்தூர் சங்கமம் நடத்திய நட்புணர்வு வாலிபால் போட்டி

விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழாவிற்கு பிறகு அமீரகத்தில் கால் தடம் பதித்து ஊருக்காகவும் உழைத்த  சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அதாவது 1970 காலக்கட்டத்திலேயே துபாய்க்கு வந்து உழைத்து வருமானம் ஈட்டியதோடு மட்டுமல்லாமல் நாட்டுக்காகவும் ஊருக்காகவும் உதவும் வகையில் பல்வேறு நற்காரியங்கள் செய்து இளையோருக்கு வழிகாட்டியமைக்காகஆரம்பம் காலம் தொட்டு செயல்பட்டுபின்னர் அவர்களின் வழியில் செயல்பட்ட முக்கியநபர்களுக்கு அவர்களின் சேவையை நினைவுகூறும் விதமாக பாராட்டு விருது வழங்கப்பட்டது. பாராட்டு விருதுகளை அவரவர்களின் வாரிசுகள் மற்றும் உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.

அமீரகத்தை விட்டு தாயகம் திரும்பியிருந்தாலும் அந்த முன்னோர்களின் சேவையை நினைவு கூர்ந்த நிகழ்வு அனைவரையும் நெகிழ வைத்தது.

மேலும் வி.களத்தூர் கிராம நலனில் அக்கறை கொண்டு நற்காரியங்கள் செய்துவரும் புஷ்ரா மற்றும் IMCT அமைப்புகளுக்கும் சிறந்த சேவைக்கான விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இந்த வி.களத்தூர் சங்கமம் நிகழ்ச்சியில் சுமார் 600 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட ஒரு சிலரிடம் கேட்ட போது. ‘வருடா வருடம் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தலாம். ஏனோ சில காரணங்களால் இடையில் சில வருடம் நிறுத்தி திரும்பவும் ஆரம்பித்ததில் மகிழ்ச்சிதான்’ என்று கூறினர். மற்றொருவர் கூறும் போது பல வருடங்களுக்கு பிறகு பல நபர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்ததாக கூறினர்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான அஹமது அலி அவர்களிடம் நிகழ்ச்சி பற்றி கேட்ட போது.  ‘இந்த சங்கமம் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பதற்கு இதை நடத்துவதற்கும் நிறைய நபர்கள் உதவியுள்ளனர்உதவிக்கொண்டிருக்கின்றனர். அதே போல் வி.களத்தூர் சங்கமம் நிகழ்ச்சி ஆரம்பிக்க முதல் காரணமாக இருந்தவர் என்றால் சர்புதீன் அவர்களைத்தான் சொல்ல வேண்டும். சர்புதீன் பாய் மற்றும் அவர்களது நண்பர்கள் இந்த நிகழ்ச்சி வரை அதே உற்சாகத்துடன் ஒருங்கிணைந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அங்கே பார்த்தாலே உங்களுக்கு தெரியும் என்று கூறிக்கொண்டே மற்ற வேலைகளை பார்க்க சென்றுவிட்டார்.

இவ்வருட சங்கமம் நிகழ்ச்சியினை முன்னின்று நடத்திய அலி ராஜா அவர்கள் நம்மிடம் பேசும் போது “இனி வரும் காலங்களில் வருடா வருடம் கண்டிப்பாக தொடர்ந்து நடத்த முயற்சிக்கிறோம். அதே போல இந்த நிகழ்ச்சிக்காக பொருளாதார உதவிகள் புரிந்த அனைவருக்கும் நன்றியையும்ஒருங்கிணைப்பாளர்கள் அனைவருக்கும் நன்றியும் தெரிவிக்கிறோம்” என்று அவர் கூறினார்.

ஒற்றுமையாக ஒன்று கூடி சந்தோஷமாக பிரிந்தவர்கள் பார்க்கும் தருணத்தில் திரும்ப எப்போது சேருவோம் என்ற ஏக்கம் அங்கே தெரிந்தது.

மேலும் போட்டோக்களை காண வி.களத்தூர் சங்கமம் 2019
இந்த நிகழ்ச்சியை பற்றி News J வில் வந்த வீடியோ காண  – வி.களத்தூர் சங்கமம் 2019 News J

-அப்துல் காதர்-
Leave a Reply

%d bloggers like this: