துபாய் பிரேம்-க்கு கின்னஸ் உலக சாதனை விருது!

Hits: 0

துபாய் பிரேம்-க்கு கின்னஸ் உலக சாதனை விருது!


ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயின் ஜபீல் பூங்காவில் துபாய் பிரேம் (Dubai Frame) என்னும் புகைப்பட சட்டம் போலமைப்பில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த புகைப்பட சட்டம் வடிவத்திற்குத் துபாய் பிரேம் (Dubai Frame) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த துபாய் பிரேம்-க்குத்தான் உலகின் மிகப் பெரிய பிரேம் வடிவ கட்டிடமென்று கின்னஸ் உலகச் சாதனை விருது கிடைத்துள்ளது.

கடந்த வாரம் 10-ம் தேதி வெள்ளிக்கிழமை கின்னஸ் உலக சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்தச் சான்றிதழை துபாய் மாநகராட்சி பொது இயக்குநர் தாவுத் அப்துல் ரஹ்மான் அல் ஹாஜிரி அவர்களிடம் கின்னஸ் அதிகாரி தலால் உமர் கொடுத்தார். தலால் உமர் அவர்கள் வளைகுடா நாடுகளுக்கான கின்னஸ் அதிகாரியாவார்.

இந்த துபாய் பிரேம் (Dubai Frame) கட்டிடமானது 2013 ஆம் ஆண்டு கட்ட ஆரம்பிக்கப்பட்டது. கடந்த வருடம் அதாவது 2018 -ம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி பார்வைக்கு அனுமதிக்கப்பட்டது.  துபாய் ஜபீல் பூங்காவில் 492 அடி உயரமும், 305 அடி அகலத்தில் இந்த துபாய் பிரேம் உள்ளது.

மக்கள் பார்வைக்கு விடப்பட்ட 6 மாதத்தில் மட்டும் சுமார்  4,66,000 பேர் பார்வையிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 492 அடி உயரத் துபாய் பிரேமை கிட்டே இருந்து பார்த்தவர்களைக் கணக்கிடலாம் எட்ட இருந்து பார்த்தவர்கள் எத்தனை கோடிபேரோ…

அப்புறமென்ன துபாய்க்கு வந்தால் இந்த துபாய் பிரேம்கிட்டே நின்னு உங்க மொபைலில் ஒரு செல்பி பிரேம் எடுத்துக் கொள்ளுங்கள்.
Leave a Reply