துபாயிலுள்ள மாலில் கிடைத்த சிறுவனைப் பற்றிய அதிர்ச்சியூட்டும் விவரங்கள்.

துபாயிலுள்ள மாலில் கிடைத்த சிறுவனைப் பற்றிய அதிர்ச்சியூட்டும் விவரங்கள்.

இந்த மாதம் 7-ம் தேதி துபாயின் டேராவிலுள்ள ரீப் மாலில் ஒரு பெண் தான் அழைத்து வந்த சிறுவனை விட்டு விட்டு சென்றுவிட்டாள். அந்த சிறுவன் அல் முரகாபாத் காவல் நிலைய அதிகாரிகளின் பராமரிப்பில் ஒரு வாரத்திற்கும் மேலாக தங்க வைக்கப்பட்டு இருந்தான்.  பிறகு பெண்கள் மற்றும் குழந்தைகள் நல காப்பகத்திற்கு அனுப்பிவைத்தனர். தற்போது அந்த சிறுவனைப் பற்றிய அதிர்ச்சியூட்டம் தகவல்களை துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது.

அந்த சிறுவனை பெற்றெடுத்த பிறகு அந்த தாய் அக்குழந்தையை அதே தேசத்தைச் சேர்ந்த மற்றொரு பெண்ணின் பராமரிப்பில் விட்டுவிட்டு நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். பிறகு அமீரகத்திற்கு  திரும்பி வரவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்த தகவல் எப்படி கிடைத்தது என்கிற விவரத்தை அல் முரகாபத் காவல் நிலைய இயக்குநர் பிரிகேடியர் அலி கானேம் அவர்கள் தெரிவித்ததாவது: சிறுவனைப் பற்றிய விவரங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்த ஒன்றரை மணிநேரத்திற்குள் காவல்துறைக்கு அழைப்பு வந்தது. அழைத்தவர் தனக்கு சிறுவனைத் தெரியும் என்றும் ஷார்ஜாவில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் அவரைப் பார்த்ததாகவும் கூறினார்.

உடனடியாக துபாய் காவல்துறை, ஷார்ஜா காவல்துறையின் ஒத்துழைப்புடன் அந்தப் பெண்ணை கைது செய்தது. கைது செய்யப்பட்டு விசாரித்த போது அந்த பெண் கூறியதாவது: அந்தச் சிறுவன் தனது மகன் அல்ல என்று கூறினார். மேலும் ஐந்து வருடங்களுக்கு முன்பு இவன் குழந்தையாக இருந்தபோது அவனை கவனித்துக் கொள்ளும்படி என்னிடம் அவனது தாயிடம் கேட்டார். நானும் அக்குழந்தையை பராமரித்து வந்தேன்.  நாட்டை விட்டு வெளியேறிய இவனுடைய தாய் பிறகு இந்த அமீரகத்திற்கு வரவே இல்லை. மேலும் இவனது தாயையும் என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்களது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும்  நண்பர்களை தொடர்பு கொள்ள எந்த விவரங்கள் தன்னிடம் இல்லை என்று கூறினார்.

இவனுடைய அம்மா திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில் நானும் யாரிடமும் சொல்லாமல் ஐந்து ஆண்டுகளாக குழந்தையை கவனித்து வந்தேன். இருப்பினும் சிறுவனை பராமரிக்கவும் மற்றும் கல்விக்கு செலவு செய்யவும் பணப்பற்றாக்குறை உண்டானது. அதை என்னால் சமாளிக்க முடியவில்லை. இதற்காக எனது தோழியை ஒருவரின் உதவியை நாடினேன் அவளின் அறிவுறுத்தலின் படி குழந்தையை வேறொரு பெண்ணுக்கு கொடுத்தேன். அல் முதீனா பகுதியில் வசித்து பெண் இந்த சிறுவனை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு கவனித்துக்கொண்டாள். அவளும் பின்னர் அந்தச் சிறுவனை ஒப்படைக்க விரும்பினாள் மற்றொரு தோழியிடம் உதவி கேட்க ஒரு மாலில் தொலைந்து போனதாகக் கூறி சிறுவனை போலீசில் ஒப்படைத்து விடலாம் என்று எண்ணத்தில் விட்டுவிட்டு சென்றதாக கூறினாள்.

அவர்கள் நாள்வரையும் கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டி.என்.ஏ பரிசோதனை செய்ய நான்கு பெண்களின் இரத்த மாதிரிகளை காவல்துறையினர் எடுத்துச் சென்றதாகவும், இவர்களில் யாரும் சிறுவனின் தாய் இல்லை என்றும் அல் முரகாபத் காவல் நிலைய இயக்குநர் பிரிகேடியர் அலி கானேம் கூறினார்.

source – gcctamilnews.com

வளைகுடா செய்திகளுக்கு www.gcctamilnews.com
Leave a Reply

%d bloggers like this: