நீயா 2- படத்தில் திரைக்கதை தான் பலம்: இயக்குனர் எல். சுரேஷ்.

நீயா 2- படத்தில் திரைக்கதை தான் பலம்: இயக்குனர் எல். சுரேஷ்.



இந்த நீயா 2 படம் குறித்து இயக்குனர் எல்.சுரேஷ் கூறும்போது, இப்படத்தின் மிகப்பெரிய பலம் திரைக்கதை தான். அதுமட்டுமில்லாமல், பாம்பின் சாகச காட்சிகளும் இருக்கும். மேலும், ‘நீயா’ படத்தில் நல்ல பாம்பு இடம் பெற்றிருக்கும். அதைவிட அதிகமாக பயம் உண்டாக்க வேண்டும் என்று  இந்தப்படத்தில் கருநாகத்தைத் தேர்ந்தெடுத்தோம் என்று கூறினார். பாம்பிற்காக நாங்கள் பல இடங்களில் தேடி அலைந்து இறுதியாக பாங்காக்கில் உள்ள கோப்ரா வில்லேஜ் என்ற இடத்தில் உள்ள பாம்பைத்தான் தேர்வு செய்தோம்.  முதலில் நிஜ பாம்பை வைத்து எடுக்கத்தான் முடிவு செய்தோம். ஆனால், அங்குள்ள பாம்பிற்கு ஒரு வார காலம் தான் நிஜ உருவம் இருக்கும். அதற்கு மேல் தோல் உரிவதும் வளர்வதுமாக இருப்பதால் படப்பிடிப்பிற்கு உகந்ததாக இருக்காது என்று கிராபிக்ஸ் செய்ய முடிவெடுத்தோம்.

நீயா வைப் போலவே இந்த நீயா 2 இருக்குமா என்ற கேள்விக்கு,  ‘நீயா’ படத்திற்கும் இந்த படத்திற்கும், மூன்று சம்பந்தம் உள்ளது. ‘பெயர்’, ‘பாம்பு’ மற்றும் ‘ஒரே ஜீவன்’ பாடல் இவை மூன்று தவிர அந்த கதைக்கும், இந்த கதைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நீயா படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமாக உருவம் மாறி பழி வாங்கும். ஆனால், இந்த படத்தில் அப்படி இருக்காது. இப்படத்தில் பாம்புக்கென்று பெயர் கிடையாது என்று கூறினார்.

525total visits,1visits today




Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: