துறைமங்கலத்தில் உள்ள சொக்கநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்.
சொக்கநாதர் கோவிலில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
பெரம்பலூர் புறநகர் துறைமங்கலத்தில் உள்ள சொக்கநாதர் உடனுறை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனை சிவமணி சிவாச்சாரியார் நடத்தினார். பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் கோவிலுக்கு வெளியே நின்று சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பிரதோஷ வழிபாட்டுக்குழுவினர், ருத்ரா அறக்கட்டளை பொறுப்பாளர்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
You must log in to post a comment.