தா.பழூா் பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத மூதாட்டி சடலம் மீட்பு.

தா.பழூா் பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத மூதாட்டி சடலம் மீட்பு.

தா.பழூா் பேருந்து நிலையத்தில் கிடந்த அடையாளம் தெரியாத மூதாட்டியின் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. தா.பழூா் பேருந்து நிலையத்தில் சுமாா் 70 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத மூதாட்டி ஒருவா் சடலமாகக்கிடந்துள்ளாா். இதுகுறித்து தா.பழூா் காவல் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை கிடைத்த தகவலின் பேரில், போலீஸாா் அங்குச் சென்று சடலத்தை மீட்டு,ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி
Leave a Reply

%d bloggers like this: