தாயை கொடுமை படுத்திய கொடூர மகன்.

தாயைக் கொடுமைப் படுத்திய கொடூர மகன்.

தனக்குப் பிறந்த குழந்தையைச் சரியாகக் கவனிக்கவில்லை, இதனால்தான் தமது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது என்று தன்னை பெற்ற வயதான தாயைக் கொடுமைப் படுத்திய மகன். இதனால் அந்த தாயும் இறந்துவிட்டார். இந்த மாபாதகச் செயல் துபாயின் அல் கிஸசில் நடந்துள்ளது.

கடந்த வருடம் இந்தச் சம்பவம் நடந்ததுள்ளது. புதன் கிழமை (நேற்று) விசாரணைக்கு வந்தது. இந்தியாவைச் சார்ந்த 29வயதுடைய அந்த தாயின் மகன் மற்றும் மருமகள் சேர்ந்து அந்த வயதான தாயை கொடுமைப் படுத்தியுள்ளனர்.

அந்தக் குடியிருப்பில் தங்கியுள்ள மற்றொருவர்தான் இதற்குச் சாட்சிக் கூறியுள்ளார். இதைப் பற்றி அவர் கூறும் போது. சில நாட்களுக்கு முன்பாக அந்த பெண் தன்னிடம் அவளுடைய மாமியார் வந்திருப்பதாகத் தெரிவித்தார். அவளுடைய கைக்குழந்தையைப் பார்த்துக் கொள்ள வந்திருந்த மாமியார் சரியான முறையில் அவளது கைக்குழந்தை கவனிப்பதில்லை என்றும் அந்த மருமகள் கூறியுள்ளார்.

சில தினங்களுக்குப் பிறகு அக்குடியிருப்பில் ஒரு வயதான பெண்மணியைப் பார்த்துள்ளார். பார்க்கவே பரிதாபமாகவும் உடலில் தீக்காயங்கள்  இருப்பதைக் கண்டு என்ன எது என்று அவரிடம் விசாரித்துள்ளார். பதிலேதும் சொல்லாமல் அந்த வயதான தாய் சென்று விட்டார்.  உடல் இழைத்து துரும்பாக உள்ள அவருக்கு எதோ பிரச்சனை என்று அறிந்து கொண்டார். இந்த தகவலை அங்கிருந்த செக்யுரிட்டிக்கு தெரிவித்துள்ளார். பிளாட்டில் சென்று பார்த்தபோது தரையில் படுத்து இருந்தார். இவர் யார் என்று விசாரித்த போது, எனது தாய் இவருக்குக் கட்டிலில் படுக்கப் பிடிப்பதில்லை என்று கூறியுள்ளார் அந்த 29 வயதுடைய மகன்.

அந்த வயதான தாயை பார்த்தவுடன் நான் ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துவிட்டேன். பிறகு அவருக்கு உதவி செய்யத் துணியைச் சரி செய்யும் போது தீக்காயத்தில் துணி ஒட்டிக் கொண்டிருந்தது. அதை எடுக்கும் போது வலியால் துடிதுடித்துப் போனார் என்று கூறினார்.

ஆம்புலன்ஸ்க்கு அவரைத் தூக்கிச் செல்லக் கூட அவரது மகன் முன்வரவில்லை. உடலிலுள்ள தீக்காயங்களைப் பார்த்தவுடன் இது எப்படி நடந்தது என்று துணை மருத்துவர் கேட்டபோது. சுடு தண்ணீரை தன்மீது கொட்டிக் கொண்டார் என்று அவர் மகன் கூறினார். அக்கம் பக்கம் உள்ளவர்களின் உதவியுடன் ஆம்புலன்ஸில் கொண்டு சென்று ராஷித் ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டதாக ஆம்புலன்ஸில் வந்திருந்த துணை மருத்துவரும் கூறியுள்ளார். அடுத்த ஒரு மாதத்தில் மருத்துவமனையில் அந்த வயதான தாய் இறந்தும் விட்டார்.

50 வயதைத் தாண்டிய அந்த தாய் அதிக துன்புறுத்தலுக்கு ஆளாகியிருந்ததாகவும். அவரது உடலில் அதற்கான காயங்கள் எலும்பு முறிவு இருந்ததென்றும். சரியான உணவும் கொடுக்காமல் பட்டினி போட்டும் கொடுமை செய்யப்பட்டிருந்தது என்றும். மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டபோது வெறும் 29 கிலோ கிராம் எடையிலிருந்ததாக தடயவியலின் அறிக்கையும் கூறியுள்ளது.

குற்றத்தை மகனும் மருமகளும் ஒத்துக் கொள்ளாத நிலையில் வழக்கு வரும் ஜூலை மாதம் 3-ம் தேதிவரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  அதுவரை கணவனும் மனைவியும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

sgn200619Leave a Reply

%d bloggers like this: