[the_ad id=”7251″]
தவறுதலா வாட்ஸ்ஆப் மெசேஜ் டெலிட் பண்ணிட்டீங்களா?
அவசரத்திலோ அல்லது தவறுதலாகவோ நாம் நம்ம மொபைலில் வாட்ஸ் ஆப்பில் மெசேஜை அழித்திருப்போம். சில நேரங்களில் அது ரொம்ப முக்கியமான செய்தியாகவோ அல்லது போட்டோக்களாக, டாக்குமென்ட்களாக இருக்கும். மெசேஜ்கள் அழிந்து போய் விட்டது என கவலைப்படுவோம். இனி அந்த கவலையே வேண்டாம். அழிந்தவற்றை திரும்ப எடுக்க வழிகள் இருக்கிறது. இந்த பதிவில் அதைப்பற்றிதான் விபராம பார்க்கப் போகிறோம்.
வாட்ஸஆப்பில் அழிந்தவற்றை iCloud அல்லது Google Drive- ல் இருந்து திரும்ப எடுக்கலாம். அல்லது தற்போது இருக்கும் வாட்ஸ்ஆப் அப்ளிகேஷனை uninstall செய்துவிட்டு மீண்டும் புதிதாக Install செய்தும் சமீபத்திய தரவுகளை பெறலாம். இந்த இரண்டாவதாக சொல்லியுள்ள வழி எளிமையானது ஆனால் அதே நேரத்தில் அதில் சில பிரச்சனைகளும் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு முன்புள்ளதை மட்டுமே பெற முடியும் அதற்கு பிறகுள்ள மெசேஜ்கள் கிடைப்பதில்லை.
சாட் பேக்அப் ஆப்ஸன் (chat backup)
நீங்கள் வைத்திருக்கும் ஸ்மார்ட்போன்களில் சாட் பேக்அப் ஆக்டிவில் இருக்கிறதா என்பதை சரிபார்த்து கொள்ளுங்கள். அதை எப்படி பார்ப்பது. உங்கள் போனில், வாட்ஸ்ஆப்பை ஓபன் செய்து ‘Settings > Chats > Chat backup‘ சென்று சாட் பேக்அப் ஆக்டிவில் இருக்கிறதா என்பதை பார்த்து கொள்ளுங்கள். அந்தப்பகுதியில் சில ஆப்ஸன்கள் இருக்கும் அதாவது தினமும் நமது chatting சேமிக்கவும், வாரம் ஒருமுறை சேமிக்கவும், மாதம் ஒருமுறை சேமிக்கவும் என்ற வகையில் வசதிகள் இருக்கும். அதோடு Google Drive- ல், உங்கள் கூகுள் கணக்கில் இந்த சாட் பேக்அப் செய்து கொள்ளவும் வசதிகள் இருக்கின்றது.
நீங்கள் ஐபோன் பயன்படுத்தினால்.
ஐபோனில், வாட்ஸ்ஆப்பை ஓபன் செய்து ‘Settings > Chats > Chat backup‘ என்ற பகுதியில் ஆட்டோ பேக்அப் வசதி இருக்கும். அதைப் பயன்படுத்தி iCloud-ல் சாட் பேக்அப் செய்து கொள்ளலாம்.
பேக்அப் செய்த மெசேஜ்களை எப்படி பெறுவது.
1. உங்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்ஆப்பை அன்-இன்ஸ்டால் செய்யுங்கள்.
2. உங்கள் மொபைல் நம்பரை அளித்து மீண்டும் வாட்ஸ்ஆப்பை இன்ஸ்டால் செய்யுங்கள்.
3. இன்ஸ்டால் ஆனவுடன் ஆண்ட்ராய்ட் போன்களுக்கு கூகுள் ட்ரைவிலிருந்தும், ஐபோன்களுக்கு iCloud-லிருந்து பேக்அப் செய்வதற்கான வசதி காண்பிக்கப்படும்.
4. அங்கு காணப்படும் ‘Restore‘ பட்டனை அழுத்தி, அழிந்துபோன உங்கள் வாட்ஸ்ஆப் மெசேஜ்களை மீட்டெடுத்துக்கொள்ளலாம்.
[the_ad id=”7251″]
Android போனின் லோக்கல் பேக்அப்பிலிருந்து மெசேஜ்களை எப்படி திரும்ப பெறுவது?
File Manager > WhatsApp > Database, இதை பின்பற்றி உள்ளே செல்லுங்கள். அங்கு ‘msgstore.db.crypt12‘ என்ற ஒரு டாக்குமென்ட் இடம் பெற்றிருக்கும். அதை தேர்வு செய்து ‘msgstore_BACKUP.db.crypt12‘ என பெயர் மாற்றுங்கள். பின் ‘msgstore-YYYY-MM-DD.1.db.crypt12‘ இம்மாதிரி பல டாக்குமென்ட்கள் அங்கு இடம் பெற்றிருக்கும். அதில் மிக சமீபத்திய டாக்குமென்ட் எது என்பதை பார்த்து, அதை ‘msgstore.db.crypt12‘ என பெயர் மாற்றுங்கள். பின் உங்கள் கூகுள் ட்ரைவை ஓபன் செய்து அங்குள்ள பேக்-அப் (Backups) என்ற வசதியை தேர்வு செய்யுங்கள். அதில் உள்ள வாட்ஸ்ஆப் பேக்-அப் டாக்குமென்ட்டை அழித்துவிடுங்கள். இது லோக்கல் பேக்-அப்பிலிருந்து வாட்ஸ்ஆப் மெசேஜ்களை மீட்டெடுக்க உதவும்.
உங்கள் வாட்ஸ்ஆப்பை அன்-இன்ஸ்டால் செய்து இன்ஸ்டால் செய்யுங்கள். தற்போது அங்கு காணப்படும் ‘Restore‘ பட்டனை அழுத்தி, அழிந்துபோன உங்கள் வாட்ஸ்ஆப் மெசேஜ்களை மீட்டெடுத்துக்கொள்ளலாம்.
[the_ad id=”7250″]
[the_ad id=”7251″]
[the_ad id=”7252″]
You must log in to post a comment.