தம்பதியை கொன்ற வழக்கில்

தம்பதியை கொன்று கொள்ளையடித்த வழக்கில் முக்கிய நபர் கைது.

429

தம்பதியை கொன்று கொள்ளையடித்த வழக்கில் முக்கிய நபர் கைது.

தம்பதிைய கொன்று நகை- பணம் கொள்ளை வழக்கில் முக்கிய நபர் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள அல்லிநகரம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மனைவி அறிவழகி. வீட்டிலிருந்த வயதான இந்த தம்பதியை கடந்த மாதம் 8-ந் தேதி மர்ம நபர்கள் கொலை செய்து விட்டு 16 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தனிப்படை அமைத்து இந்த வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரான சென்னை பூந்தமல்லியில் இருந்த ஜோதி மகன் மகேசை(வயது 22) நேற்று முன்தினம் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் கூறுகையில், மகேசுக்கு குன்னம் அருகே உள்ள மேல உசேன் நகரம் சொந்த ஊராகும். இவர் தி.நகர் பகுதியில் இருந்தார். இவரது தந்தை ஜோதி கடந்த வருடம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தார். அவருக்கு திதி கொடுப்பதற்காக கடந்த மே மாதம் 17-ந் தேதி அன்று மேல உசேன் நகரத்திற்கு மகேஷ் வந்தார். அப்போது சென்னை சேர்ந்த சத்யா (20), யுவராஜ் (26), ஸ்ரீராமகிருஷ்ணன் (23) ஆகிய 3 பேரையும் அழைத்து வந்தார். அங்கு ஊரில் தந்தைக்கு திதி கொடுத்து விட்டு, வைத்திருந்த பணத்தை குடித்து செலவு செய்தனர். அப்போது அவர்களுக்கு, மேல உசேன் நகரத்தைச் சேர்ந்த மகேசின் உறவினரான சந்தோஷ் (24), மணிகண்டன் (21) இருவரும் பழக்கம் ஆனார்கள்.

செலவிற்கு பணம் இல்லாத சூழ்நிலையில் 6 பேரும் சேர்ந்து கூடி பேசி, ஏதாவது வீட்டில் திருடலாம் என முடிவு செய்தனர். அப்போது சந்தோஷ், தனக்கு பழக்கமான பெரியசாமி வீட்டில் திருடலாம் என ஆலோசனை கூறி உள்ளார். அறிவழகியும் வீட்டில் பரிகாரம் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே சந்தோசிடம் கூறியுள்ளார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கடந்த ஜூன் மாதம் 8-ந் தேதி இரவு அறிவழகி வீட்டிற்கு சென்றனர். அங்கு கதவை தட்டியபோது அறிவழகி கதவை திறந்துள்ளார். இதையடுத்து சந்தோஷ், மகேஷ் மற்றும் நண்பர்கள் உள்ளே சென்றனர்.

அப்போது மகேஷ் மறைத்து வைத்து இருந்த இரும்பு சுத்தியலால் அறிவழகி மற்றும் பெரியசாமி இருவரையும் தலையில் அடித்து கொலை செய்தார். பின்னர் நகை மற்றும் பணத்தையும் எடுத்து சென்றனர், என்று தெரியவந்ததாக கூறினர். இதையடுத்து மகேசை பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெரம்பலூர் சிறையில் அடைத்தனர்.

Our Facebook Page
%d bloggers like this: