பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கு தமிழக அரசு வேலை!

பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கு தமிழக அரசு வேலை!

தமிழக காவல் துறையின் கீழ் செயல்பட்டு வரும் SBCID சிறப்பு புலனாய்வுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம், 37 ஜூனியர் ரிப்போர்டர் பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதால் இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : சிறப்பு புலனாய்வுத் துறை (SBCID)

மேலாண்மை : தமிழக அரசு

பணி : ஜூனியர் ரிப்போர்ட்டர்

மொத் காலிப் பணியிடங்கள் : 37

ஊதியம் : மாதம் ரூ.36,200 முதல் ரூ.1,14,800 வரையில்

வயது வரம்பு : 01.07.2018 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி :

தமிழ் ஒரு பாடமாகக் கொண்டு 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஆங்கில சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சில் முதுகலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழில் தட்டச்சு செய்வதில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தமிழக அரசால் வழங்கப்படும் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து சான்றிதழ், ஆபிஸ் ஆட்டோமேசன் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை :

சுருக்கெழுத்து மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
90 மதிப்பெண்களுக்கு சுருக்கெழுத்து தேர்வும், 10 மதிப்பெண்களுக்கு நேர்முகத் தேர்வும் நடத்தப்படும்.
சுருக்கெழுத்து தேர்வில் நிமிடத்திற்கு 120 வார்த்தைகள் ஆங்கிலத்திலும், தமிழில் 90 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு நடைபெறும் இடம் : சென்னை

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் தங்களது முழு விவரங்களையும் ஏ4 வெள்ளைத்தாளில் தயார் செய்து, பூர்த்தி செய்து சுய சான்று செய்த தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து பதிவு தபால் மூலம் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :

The Chairman, Selection Committee, Police Shorthand Bureau, HQ, 2nd Floor, Old Coastal Security Group Building, DGP Office Complex, Mylapore, Chennai-4

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 21.03.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.tnpolice.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் பார்க்கவும்.

24total visits,2visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: