பெரம்பலூரில் நாளை (ஆக. 7) தனியார் வேலைவாய்ப்பு முகாம்.

பெரம்பலூரில் நாளை (ஆக. 7) தனியார் வேலைவாய்ப்பு முகாம்.

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் நிறுவன சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் புதன்கிழமை (ஆக. 7) நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அப்பல்லோ மருத்துவமனை நிறுவனம் பங்கேற்கும் தனியார் நிறுவன சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்நிறுவனம் 10, 12 ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, டி.பார்ம் மற்றும் பி.பார்ம் கல்வித்தகுதியுள்ள 100-க்கும் மேற்பட்டவர்களை தேர்வு செய்ய உள்ளது.

இப்பணியிடங்களில் சேர விரும்பும் தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் புதன்கிழமை காலை 10 மணிக்கு பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ள முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.

தினமணி

Leave a Reply

%d bloggers like this: