தண்ணீர்பந்தல் பகுதியில்  வாகனங்களில் பேட்டரி திருட்டு.

தண்ணீர்பந்தல் பகுதியில்  வாகனங்களில் பேட்டரி திருட்டு.


பெரம்பலூர் அருகே வியாழக்கிழமை இரவு நிறுத்தப்பட்டிருந்த 4 வாகனங்களில், ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான பேட்டரிகளை திருடிச்சென்ற  நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் அருகே தண்ணீர்பந்தல் பகுதியில் சாலையோரம் உள்ள மளிகைக் கடையின் எதிரே வியாழக்கிழமை இரவு 3 டிராக்டர்கள் மற்றும் ஒரு டிப்பர் லாரியை நிறுத்திவிட்டு, அதன் ஓட்டுநர்கள் தங்கள் வசிப்பிடத்துக்கு சென்றுள்ளனர். வெள்ளிக்கிழமை காலையில் வந்து பார்த்தபோது வாகனங்களில் பொறுத்தப்பட்டிருந்த பேட்டரிகளை காணவில்லையாம். இதன்மதிப்பு ரூ. 50 ஆயிரம் எனக் கூறப்படுகிறது.

தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று பார்வையிட்டு, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பெரம்பலூர் போலீஸார் வழக்குப்பதிந்து,  திருட்டில் ஈடுபட்டவர்களைத் தேடி வருகின்றனர்.

தினமணி


மேலும் மாவட்ட செய்திகள் வாசிக்க – பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

Leave a Reply

%d bloggers like this: