தண்டாயுதபாணி கோவிலில்

செட்டிக்குளம் தண்டாயுதபாணி கோவிலில் ஏழைகளுக்கு தினமும் உணவு.

440

செட்டிக்குளம் தண்டாயுதபாணி கோவிலில் ஏழைகளுக்கு தினமும் உணவு.

தண்டாயுதபாணி கோவிலில் ஏழைகளுக்கு தினமும் உணவு வழங்க தி.மு.க. ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த வருகிற 31-ந் தேதி வரை தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாட்களில் பசியால் யாரும் தவிக்க கூடாது என்பதை கருத்தில் கொண்டு தி.மு.க.வினர் ஏழை-எளிய மக்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிக்குளத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி மலைக்குன்றை சுற்றிலும் தங்கியிருக்கும் சாதுக்கள், யாசகர்கள், குறிசொல்லி பிழைக்கும் ஏழை-எளிய மக்களுக்கு தினமும் தி.மு.க. மருத்துவர் அணி சார்பில் உணவு வழங்கும் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், மாநில மருத்துவர் அணி துணை செயலாளர் டாக்டர் செ.வல்லபன் கலந்து கொண்டு 50-க்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கி தினமும் காலை உணவு வழங்கும் சேவைப்பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆலத்தூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் சோமு.மதியழகன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர், கிளைச் செயலாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தினத்தந்தி

Our Facebook Page
%d bloggers like this: