தட்டைக்கு வைத்த தீயில் கருகிய பசுமாடு, கன்றுக்குட்டி
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. விவசாயியான இவர் தனது வயலில் அறுவடை செய்த மக்காச்சோள தட்டையில் நேற்று தீ வைத்துள்ளார். இந்த தீ மளமளவென பரவி அவரது வயலில் மட்டுமல்லாமல் அருகிலிருந்த தன்ராஜ் என்பவருக்கு சொந்தமான வயலுக்கும் தீ பரவியது. அப்போது அங்கு கட்டப்பட்டிருந்த தன்ராஜிக்கு சொந்தமான பசுமாடு ஒன்றும், கன்றுக்குட்டி ஒன்றும் தீயில் கருகி பரிதாபமாக செத்தன. இதேபோல, அருகில் உள்ள முருகேசன் என்பவரது வயலில் வைக்கப்பட்டிருந்த 10 மூட்டை மக்காச்சோளத்திலும் தீ பிடித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதுகுறித்து வி.களத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
You must log in to post a comment.